இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஆகஸ்ட் 23-ஆன இன்று, மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது.
Mi A3 ஸ்மார்ட்போன் 6.08-இன்ச் HD+ திரையை கொண்டுள்ளது
Mi A3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான், Mi.com மற்றும் Mi Home stores ஆகியவற்றில் நடைபெறவுள்ளது. Mi A2 ஸ்மார்ட்போனின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனான Mi A3, கடந்த ஆகஸ்ட் 21 அன்று இந்தியாவில் அறிமுகமானது. ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட்போனான இந்த Mi A3, மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி பிராசஸர், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகவுள்ளது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட 'Mi A3' ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் என்ற விலையிலும், 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'Mi A3' ஸ்மார்ட்போன் 15,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Not Just Blue), வெள்ளை (More Than White), மற்றும் சாம்பல் (Kind of Grey) என மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,
அமேசான், Mi தளங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஆகஸ்ட் 23-ஆன இன்று, மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு அறிமுக சலுகையாக, HDFC கிரடிட் கார்டுகளுக்கு 750 ரூபாய் கேஷ்-பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு நானோ-சிம் வசதி கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 6.08-இன்ச் HD+ திரை (720x1560 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையை கொண்டுள்ளது. ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
3 பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4,030mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 4G, வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 வசதி, டைப்-C சார்ஜர், 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple's iOS 26.2 Beta 3 Rolled Out With AirDrop Upgrades, Liquid Glass Tweaks and More