சாம்சங் கேலக்ஸி எஸ் 10-க்கு செம டஃப் கொடுக்கப்போகும் சியோமி எம்ஐ 9

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 14 பிப்ரவரி 2019 13:37 IST
ஹைலைட்ஸ்
  • 2018-ல் வெளியாகிய எம்ஐ8 போனுக்கு பிறகு எம்ஐ 9 வெளியாகுகிறது
  • மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள் மெஐ 9!
  • 'இதுவரை வெளியிடப்பட்டதில் மிகவும் அழகான போன்' என சியோமி அறிக்கை

சீனாவில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாகும் இந்த எம்ஐ 9, 6.4 இஞ்ச் அமோலெட் திரையுடன் அறிமுகமாகவுள்ளது

சியோமி நிறுவனம் தனது சமீபத்திய தயாரிப்பான எம்ஐ 9 ஸ்மார்ட்போனை வரும் 20 -ம் தேதி வெளியிடப்போவதாக சர்ப்ரைஸ் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சீனாவில் நடக்கும் இவ்விழாவில் இந்த புதிய ஸ்மார்ட்போனை வெளியாடப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

‘பாட்டில் ஏஞ்சல்' என்ற செல்லப் பெயருடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் எம்ஐ நிறுவனம் இதுவரை தயாரித்த போன்களிலே மிகவும் சிறந்த தோற்றத்தை கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கிய செய்தி என்னவென்றால், பிப்ரவரி 20 ஆம் தேதி சான் ஃபிரான்ஸ்கோவில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
 

எம்ஐ 9 வகை ஸ்மார்ட்போனின் அமைப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது கிடைத்துள்ள படி அவை குவால்கம் ஸ்னாப்டிராகன் 855 எஸ்ஓசி மற்றும் அண்டிராய்டு பையில் இயங்கபோவது குறிப்பிடத்தக்கது.

6.4 இஞ்ச் அமோலெட் திரை, 3,500 mAh பேட்டரி பவருடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது.சியோமியின் எம்ஐ 9 ஸ்மார்ட்போனின் நிறங்களை பொருத்தவரை கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் தங்க நிறங்களில் வெளியாகபோவதாக தகவல்கள் வந்துள்ளது.

மேலும் இந்த போன்கள் 8ஜிபி ரேம்+ 128 ஜிபி சேமிப்பு வசதி மாடலாகவும் , 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ள மாடல்களாக வெளியாகியுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mi 9, Redmi Mobile Phones
The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.