சியோமி நிறுவனம் தனது சமீபத்திய தயாரிப்பான எம்ஐ 9 ஸ்மார்ட்போனை வரும் 20 -ம் தேதி வெளியிடப்போவதாக சர்ப்ரைஸ் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சீனாவில் நடக்கும் இவ்விழாவில் இந்த புதிய ஸ்மார்ட்போனை வெளியாடப்போவதாக தகவல் கசிந்துள்ளது.
‘பாட்டில் ஏஞ்சல்' என்ற செல்லப் பெயருடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் எம்ஐ நிறுவனம் இதுவரை தயாரித்த போன்களிலே மிகவும் சிறந்த தோற்றத்தை கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய செய்தி என்னவென்றால், பிப்ரவரி 20 ஆம் தேதி சான் ஃபிரான்ஸ்கோவில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
எம்ஐ 9 வகை ஸ்மார்ட்போனின் அமைப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது கிடைத்துள்ள படி அவை குவால்கம் ஸ்னாப்டிராகன் 855 எஸ்ஓசி மற்றும் அண்டிராய்டு பையில் இயங்கபோவது குறிப்பிடத்தக்கது.
6.4 இஞ்ச் அமோலெட் திரை, 3,500 mAh பேட்டரி பவருடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது.சியோமியின் எம்ஐ 9 ஸ்மார்ட்போனின் நிறங்களை பொருத்தவரை கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் தங்க நிறங்களில் வெளியாகபோவதாக தகவல்கள் வந்துள்ளது.
மேலும் இந்த போன்கள் 8ஜிபி ரேம்+ 128 ஜிபி சேமிப்பு வசதி மாடலாகவும் , 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ள மாடல்களாக வெளியாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்