3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய்
பச்சை வண்ணம் தவிர்த்து நீலம், சாம்பல் என மேலும் இரு வண்ணங்களை இந்த 'எல்.ஜி W30' ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது
நீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்ற்ம் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களில் அறிமுகமான எல்.ஜி W30 ஸ்மார்ட்போனில் பச்சை (Aurora Green) நிறம் கொண்ட ஸ்மார்ட்போன் மட்டும் அமேசான் ப்ரைம் டே சேலில் விற்பனையாகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3GB RAM, 32GB சேமிப்பு, 6.26-இன்ச் திரை, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 4000mAh பேட்டரி என்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
எல்.ஜி W30 ஸ்மார்ட்போன்களில் விலை!
எல்.ஜி W30 ஸ்மார்ட்போன், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. நீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்ற்ம் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
எல்.ஜி W30 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W30 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.19-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 12 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.
4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Rockstar Games Co-Founder Says GTA Games Won't Work if Set Outside the US
Red Magic 11 Pro Launched Globally With Snapdragon Elite Gen 5, Slightly Smaller Battery: Price, Specifications