Photo Credit: YouTube/ LG
வெளியீட்டிக்கு முன்பே எல்ஜி வெல்வெட்டின் விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வரலாம். இந்த எல்ஜி வெல்வெட் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 செயலியுடன் வரும் என்றும் நான்கு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் தென் கொரிய நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தது.
தென் கொரிய மன்றமான Meeco.kr-ல் ஒரு விவரக்குறிப்பு தாள் பட்டியலிடப்பட்டுள்ளது. இது எல்ஜி வெல்வெட்டின் விவரங்கள் என்று நம்பப்படுகிறது. இந்த தாளை, Sleepy Kuma என்ற பயனர் பெயர் மூலம் ட்விட்டரில் ஒரு டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார்.
தாள் படி, LG Velvet மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும். இதன் முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல்கள் இருக்கும். இது 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டிருக்கும். செல்பிக்கு, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படும்.
இந்த தாளில் IP68 மற்றும் 4,300 mAh பேட்டரிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இது Snapdragon 765 செயலியைப் பற்றியும் குறிப்பிடுகிறது. எல்ஜி வெல்வெட்-ல் 128 ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டிருக்கும். இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2 டிபி வரை விரிவாக்கம் செய்யலாம். மேலும், போனின் ஒரு மாடலாவது 8 ஜிபி ரேம் உடன் வரும்.
LG வெல்வெட் போன் அரோரா கிரீன், அரோரா கிரே, அரோரா வைட் மற்றும் இல்லுஷன் சன்செட் கலர் ஆப்ஷன்களில் வரும் என்று எல்ஜி சமீபத்தில் வெளிப்படுத்தியது. இந்த வண்ணங்கள் கசிந்த தாளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், AI செயற்கை நுண்ணறிவு ஒலி ஆகியவற்றுடன் வரும். எல்ஜி, இந்த போனில் ஃபாஸ்ட் கம்பி சார்ஜிங் ஆதரவையும், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் வழங்கும். இந்த போன் 167.1x74x7.85 மிமீ அளவு மற்றும் 180 கிராம் எடையைக் கொண்டதாகும்.
எல்ஜி வெல்வெட், மே 7 அன்று ஆன்லைன் நிகழ்வின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும்.
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்