LG Velvet-ன் ஒரே 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை தென்கொரியாவில் KRW 899,800 (இந்திய மதிப்பில் ரூ.55,700) ஆகும்.
எல்ஜி வெல்வெட் ஒரு சினிமா ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்சைக் கொண்டுள்ளது
எல்ஜி இறுதியாக தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலான எல்ஜி வெல்வெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
LG Velvet-ன் ஒரே 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை தென்கொரியாவில் KRW 899,800 (இந்திய மதிப்பில் ரூ.55,700) ஆகும். இந்த போன் கிரீன், கிரே, ஒயிட் மற்றும் இல்லுஷன் சன்செட் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் மட்டுமே கிடைக்கும்.
டூயல்-சிம் எல்ஜி வெல்வெட், 6.8 அங்குல சினிமா ஃபுல்விஷன் முழு-எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் முன் பக்கத்தில் வாட்டர் டிராப் இருக்கும். இந்த போன் Qualcomm Snapdragon 765G ஆக்டா கோர் செயலியைப் பயன்படுத்துகிறது. இதில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளது.
இந்த போன் மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் இருக்கும். போனில் எல்.ஈ.டி ஃபிளாஷ் வழங்கப்படும். செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் செல்பி சென்சார் உள்ளது.
போனின் உள்ளே 4,300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. இணைப்பிற்காக, இந்த போனில், இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
ChatGPT vs Gemini Traffic Trend in 2025 Shows Why OpenAI Raised Code Red
Itel Zeno 20 Max Launched in India With Unisoc T7100 SoC, 5,000mAh Battery: Price, Specifications