தென்கொரிய நிறுவனமான எல்ஜி தனது புதிய ஸ்மார்ட்போனான எல்ஜி வி40 தின்க்யூ மாடலை கடந்த புதனன்று நியூயார்க்கில் வெளியிட்டது. எல்ஜி வி30-யின் வெற்றியை தொடர்ந்து, முதன் முதலாக 5 கேமராக்கள் கொண்ட போனாக, அதாவது முன்பக்கம் 2 கேமராவும், பின்பக்கம் 3 கேமராவும் கொண்டதாக இந்த போனை எல்ஜி வெளியிட்டுள்ளது.
வி40 தின்-க்யூ-வின் மற்ற சிறப்பம்சம்சங்கள் என்னவென்றால், ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஐபி68 கொண்டுள்ளது. மேலும் மிலிட்டரி கிரேட், பூம்பாக்ஸ் ஸ்பிக்கர் மற்றும் 19.5:9 ஓஎல்இடி நாட்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது, பூம்பாக்ஸ் ஸ்பிக்கர்ஸ், 32-பிட் ஹைஃபை குவாட்-டியேசி ஆடியோ மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் கொண்டு ஆடியோவில் அதிக கவனம் கொண்டுள்ளது.
எல்ஜி வி40 தின்-க்யூ-வின் விலையானது ரூ.66,400-ல் இருந்து தொடங்குகிறது. இது மொபைல் மாடல்களை பொருத்து விலை மாறும். இந்த போன், ஆரோரா பிளாக், மோரக்கான் ப்ளு, பிளாட்டினம் கிரே, கார்மைன் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதில் முதல் இரண்டு நிறங்கள் அமெரிக்க சந்தைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த போன் வரும் அக்டோபர் 18 முதல் விற்பனைக்கு வருகிறது.
எல்ஜி வி40 தின்க்யூ ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 6.4 இன்ச் (1440x3120) ஓஎல்இடியுடன், 19.5:9 காரணரிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புகளுடன் வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 6ஜிபி ரேம், 128 ஜிபி இண்டெர்நெல் மெமரி கொண்டுள்ளது. மேலும் 2 டிபி வரை மைக்ரோ மெமரி கார்டு கொண்டு நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
எல்ஜி வி40 தின்க்யூ கேமராவை பொருத்தவரை, 5 கேமராக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் மூன்று கேமராக்கள் மற்றும் முன்புறம் இரண்டு செல்ஃபி கேமராக்கள் கொண்டுள்ளது. பின்புறம் 12 மெகா பிக்ஸ்செல் சென்சார் f/1.5 அப்பச்செர், பிரைமெரி லென்ஸ் கொண்ட கேமரா, 16 மெகா பிக்ஸ்செல் சென்சார் அகலமாக காட்சிப்பதிவு செய்யும் லென்ஸ் கொண்ட மற்றும் 12 மெகா பிக்ஸ்செல் சென்சார் தொலைதூர பார்வை லென்ஸ் கொண்ட கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன. முன்புறத்தில் இரண்டு செல்ஃபி கேமராக்கள் உள்ளன.
அத்துடன் 3,300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் விரைவில் சார்ஜ் ஏறும் வகையில் 3.0 வயர்லெஸ் சார்ஜிங், யூஎஸ்பி - சி டைப் கொண்டுள்ளது. இந்த போன் 158.7x75.8x7.79mm அளவு மற்றும் 169 கிராம் எடை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்