எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி ஸ்டைல் 3 ஜப்பானில் அறிமுகமாகியுள்ளது. போனில் டூயல் பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது மற்றும் டிஸ்பிளே நாட்ச் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.
எல்ஜி ஸ்டைல் 3-யின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஜப்பானிய நெட்வொர்க் ஆபரேட்டர் என்.டி.டி டோகோமோ, எல்ஜி ஸ்டைல் 3-ஐ பட்டியலிட்டுள்ளது.
LG Style 3, 6.1 இன்ச் கியூஎச்டி + (1,440 எக்ஸ் 3,120 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் Android 10-ல் இயக்குகிறது. போனில், 4 ஜிபி ரேம் இணைக்கப்பட்டு, ஆக்டா கோர் Qualcomm Snapdragon 845 SoC உள்ளது.
இந்த போன், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாருடன் கூடிய டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
எல்ஜி ஸ்டைல் 3-யில் 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்