3 ஜி.பி. ரேமுடன் பட்ஜெட் போனை வெளியிட்ட எல்.ஜி.! வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறுமா?

3 ஜி.பி. ரேமுடன் பட்ஜெட் போனை வெளியிட்ட எல்.ஜி.! வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறுமா?

மற்ற போன்களுடன் ஒப்பிடும்போது, இதன் விலை சற்று அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன.

ஹைலைட்ஸ்
  • LG Harmony 4 is powered by an unnamed octa-core processor
  • The dual rear camera setup includes a 13-megapixel main camera
  • There's an 8-megapixel camera for selfies and video calling
விளம்பரம்

எலக்ட்ரானிக் துறையில் முன்னணியில் இருந்தாலும், மொபைல் துறையில் எல்.ஜி.  நிறுவனத்தால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெரிய அளவில் பெறவில்லை.  இந்த  நிலையில் எல்.ஜி. நிறுவனம் பட்ஜெட் மொபைலை வெளியிட்டுள்ளது.

எல்.ஜி. ஹார்மனி 4 என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. முன்பு இதே நிறுவனம் எல்.ஜி. கே40  எஸ் என்ற மொபைலை கடந்த  ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின்போது வெளியிட்டது. அதில் சிறிய அளவுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இங்குதளம் ஆண்ட்ராய்டு 10 ஆக மாற்றப்பட்டுள்ளது.

ஹார்மனி 4-ல் 3,500 ஆம்ப் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.  ஒரேயொரு வண்ணத்தில் மட்டும் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 10,100 க்கு இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது. 3 ஜிபி ரேமுடன், 32 ஜி.பி. இன்பீல்டு மெமரியை கொண்டதாக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

6.1 இன்ச் வடிவம் கொண்ட இந்த போன் முழுவதும் எச்.டி. டிஸ்ப்ளேவால் ஆனது.  ஆக்டா - கோர் பிராசஸர், 3  ஜி.பி.  ரேம், 32 ஜி.பி.  உள்ளடக்க மெமரியை இது கொண்டுள்ளது. 

ஒட்டு மொத்த அளவில் 2 டி.பி.  வரையில் இந்த போனின் மெமரியை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது சிறப்பு அம்சமாகும். 13 மெகா பிக்சல் பின்பக்க கேமராவுடன், 8 மெகா பிக்ஸல் செல்பி கேமராவை கொண்டதாக போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தத்தில் பட்ஜெட் போன் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எல்.ஜி.யின் ஹார்மனி 4 போன் சந்தைக்கு வந்துள்ளது.  மற்ற போன்களுடன் ஒப்பிடும்போது, இதன் விலை சற்று அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன.  ஓரிரு மாதங்களில் இதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்கிற தகவல்கள் வெளி வந்துவிடும். 


Is OnePlus 8 Pro the perfect premium phone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • KEY SPECS
  • NEWS
Display 6.10-inch
Processor octa-core
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3500mAh
OS Android 10
Resolution 720x1560 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG Harmony 4, LG Harmony 4 price, LG Harmony 4 specifications, LG
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »