அதகளப்படுத்தும் அம்சங்களுடன் வெளியான ‘லெனோவோ Z6 ப்ரோ’!

அதகளப்படுத்தும் அம்சங்களுடன் வெளியான ‘லெனோவோ Z6 ப்ரோ’!

டூயல் நானோ சிம் ஸ்லாட் கொண்ட Z6 ப்ரோ-வில் 6.39 இன்ச் ஆமோலெட் டிஸ்ப்ளே, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக் சப்போர்ட் உள்ளிட்டவைகள் இருக்கும். 

ஹைலைட்ஸ்
  • ஸ்னாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி லெனோவோ Z6 ப்ரோ பெற்றிருக்கும்
  • 512ஜிபி வரை சேமிப்பு வசதியை இந்த போன் பெற்றுள்ளது
  • இரு வண்ணங்களில் இந்த போன் சந்தையில் கிடைக்கும்
விளம்பரம்

தொடர்ந்து பல்வேறு பரபர தகவல்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், லெனோவோ, Z6 ப்ரோ ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. சீனாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் போனை அறிமுகம் செய்துள்ளது லெனோவோ. கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட Z5 போனின் அடுத்த வெர்ஷனாக இந்த போனை லெனோவோ வெளியிட்டுள்ளது. கொரில்லா க்ளாஸ் பாதுகாப்புடன் 3டி கர்வ்டு க்ளாஸ் பின்புறம், வாட்டர்-ட்ராப் டிஸ்ப்ளே போன்றவை இந்த போனின் சிறப்பம்சங்களாகும். குவாட்-கேமரா செட்-அப், அடுத்த தலைமுறை ஃபிங்கர் பிரின்ட் சென்சார், லிக்விட் கூலிங் அமைப்பு, ஸ்னாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி உள்ளிட்டவை இந்த போனின் பிற சிறப்பம்சங்களாகும்.

லெனோவோ Z6 விலை, வெளியாகும் தேதி:

Z6 ப்ரோவின் 6ஜிபி + 128 ஜிபி வகை சுமார் 30,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 8ஜிபி + 128ஜிபி வகை 31,000 ரூபாய்க்கும், 8ஜிபி + 256ஜிபி வகை 39,000 ரூபாய்க்கும், 12ஜிபி + 512ஜிபி வகை 51,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் Z6 ப்ரோ-வின் 5ஜி வகையையும் லெனோவோ சீக்கிரமே சீனாவில் கொண்ட வர உள்ளதாம். 

போனை வாங்குவதற்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. ஆனால், ஏப்ரல் 29 ஆம் தேதி முதல்தான் போன் சந்தையில் விற்பனைக்கு வரும். கருப்பு மற்றும் நீல நிறங்களில் Z6 ப்ரோ கிடைக்கும். சீனாவைத் தவிர மற்ற சந்தைகளில் எப்போது இந்த போன் விற்பனை செய்யப்படும் என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. 

லெனோவோ Z6 ப்ரோ-வின் சிறப்பம்சங்கள்:

ஆண்ட்ராடு 9 பை மென்பொருளில் இயங்கும் Z6 ப்ரோ, கேம் டர்போ மோட், யூ-டார்ச், யூ-ஹெல்த் போன்ற வசதிகளைப் பெற்றுள்ளது. 

டூயல் நானோ சிம் ஸ்லாட் கொண்ட Z6 ப்ரோ-வில் 6.39 இன்ச் ஆமோலெட் டிஸ்ப்ளே, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக் சப்போர்ட் உள்ளிட்டவைகள் இருக்கும். 

ஸ்னாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி, ஆட்ரினோ 640 ஜிபியூ போன்ற அம்சங்களையும் இந்த போன் பெற்றுள்ளது. கொரில்லா க்ளாஸ் பாதுகாப்புடன் 3டி கர்வ்டு க்ளாஸ் பின்புறம், வாட்டர்-ட்ராப் டிஸ்ப்ளே போன்றவை இந்த போனின் சிறப்பம்சங்களாகும். குவாட்-கேமரா செட்-அப், அடுத்த தலைமுறை ஃபிங்கர் பிரின்ட் சென்சார், லிக்விட் கூலிங் அமைப்பு, 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்டவை இந்த போனின் பிற சிறப்பம்சங்களாகும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Lenovo Z6 Pro, Lenovo Z6 Pro specifications, Lenovo Z6 Pro price, Lenovo
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »