Photo Credit: Lava
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Lava Blaze 3 5G செல்போன் பற்றி தான்.
Lava Blaze 3 5G இந்தியாவில் திங்களன்று அறிமுகப்படுத்தப்பட்டது. Lava Blaze 2 5G செல்போனின் அடுத்த அப்டேட்டாக வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் கூடிய MediaTek Dimensity 6300 சிப்செட் இதில் உள்ளது. "வைப் லைட்" அம்சத்தையும் கொண்டுள்ளது, இது புகைப்படம் எடுக்கும் போது வெளிச்சத்தை மேம்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் Lava Blaze 3 5G ஆரம்ப விலை ரூ. 11,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கி சலுகைகள் இருந்தால் ரூ. 9,999 என்கிற விலைக்கும் வாங்கலாம். இது 8ஜிபி ரேம்+128ஜிபி மெமரி அளவில் கிடைக்கிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 12 மணிக்கு அமேசானில் பிரத்தியேகமாக வாங்கலாம் என கூறப்பட்டுள்ளது. கிளாஸ் நீலம் மற்றும் கிளாஸ் தங்கம் என இரண்டு வண்ணங்களில் இந்த செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Lava Blaze 3 5G ஆனது 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 201 கிராம் எடையுடையது. இது MediaTek Dimensity 6300 சிப் மூலம் இயங்குகிறது. 6GB LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 மெமரியுடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரை விரிவாக்க முடியும். அதே நேரத்தில் ரேமை கிட்டத்தட்ட 6 ஜிபி வரை விரிவாக்க முடியும். இது ஆண்ட்ராய்டு 14ல் இயங்குகிறது .
Lava Blaze 3 5G ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை AI கேமரா உள்ளது. இது செல்ஃபிக்களுக்காக 8 மெகாபிக்சல் முன் கேமராவையும் பெறுகிறது. ஒரு வினாடிக்கு 30 பிரேம்கள் (fps) வரை 2K தெளிவுத்திறனில் வீடியோ பதிவை சப்போர்ட் செய்கிறது. இது AI எமோஜி மோட், போர்ட்ரெய்ட் மோட், ப்ரோ வீடியோ மோட், டூயல் வியூ வீடியோ மற்றும் ஏஐ மோட் போன்ற கேமராவை மையமாகக் கொண்ட அம்சங்களையும் பெறுகிறது.
USB Type-C போர்ட், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் 5G, டூயல் 4G VoLTE, டூயல்-பேண்ட் Wi-Fi 5 மற்றும் ப்ளூடூத் 5.2 ஆகிய வசதிகள் உள்ளது. வ GLONASS இன் நேவிகேஷன் திறன்களுடன் வருகிறது. கூடுதல் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகியவற்றைப் பெறுகிறது. 18W வயர்டு சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்