Lava Agni 4-ன் Dual Camera டீசர் மற்றும் 7000mAh Battery பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது
                Photo Credit: Lava
Lava Agni 4 டீசர் வெளியானது: Dimensity 8350, 7000mAh பேட்டரி, டூயல் கேமரா, Rs.25,000க்கு கீழ்
நாம எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருந்த Lava Agni 4 பத்தி செம சூடான அப்டேட் வந்துருக்கு. நம்ம இந்திய கம்பெனியான Lava, அவங்களுடைய அடுத்த மாஸ் போனை நவம்பர் மாசம் ரிலீஸ் பண்ண போறாங்க. இது Agni 3-ஓட அடுத்த மாடல். இந்த போன் எப்படி இருக்கும்னு ஒரு டீஸரை Lava மொபைல்ஸ் அவங்களுடைய X பக்கத்துல (முன்னாள் ட்விட்டர்) ஷேர் பண்ணிருக்காங்க. இதுல பின்னாடி Dual Camera செட்டப் இருக்கு. அதுவும் ஒரு ஹாரிசான்டல் Pill-shaped மாட்யூல்-ல இருக்கு. பாக்க Nothing Phone 2a-வ ஞாபகப்படுத்துற மாதிரி ஒரு டிசைன். ஆனா, அந்த மாட்யூல்க்கு நடுவுல “AGNI” -னு பிராண்டிங் செஞ்சிருக்காங்க. கேமராவைப் பொறுத்தவரைக்கும், ரெண்டுமே 50-மெகாபிக்சல் சென்சார்களா இருக்கும்னு ஒரு பேச்சு இருக்கு.
அடுத்த முக்கியமான லீக், IECEE Certification Site-ல இந்த போன் லிஸ்ட் ஆகியிருக்கு (Model number LBP1071A). இதுல வெளிய வந்துள்ள தகவல் என்னன்னா, போன்ல இருக்குற Battery கெப்பாசிட்டி. இது ஒரு பிரம்மாண்டமான 7000mAh Battery உடன் வரலாம்னு சொல்லியிருக்காங்க. போன வருஷம் வந்த Agni 3-ல 5000mAh Battery தான் இருந்துச்சு. இப்போ 7000mAh-க்கு அப்கிரேட் ஆகுறது உண்மையிலேயே பெரிய விஷயம். 7000mAh Battery இருந்தா பவர் பேங்கை பத்தி கவலையே பட வேண்டியதில்லை.
அடுத்து பெர்ஃபார்மன்ஸ். லீக்ஸ் சொல்றபடி, இதுல MediaTek-ஓட தரமான Dimensity 8350 சிப்செட் இருக்க வாய்ப்பிருக்கு. இதுவும் ஒரு பெரிய அப்கிரேடுதான். டிஸ்பிளே-வைப் பத்தி பேசணும்னா, 6.78-இன்ச் Full HD+ டிஸ்பிளே, அதுவும் 120Hz Display ரெஃப்ரெஷ் ரேட்டோட வரலாம்னு எதிர்பார்க்கப்படுது. இதனால ஸ்க்ரோலிங் மற்றும் கெய்மிங் எல்லாம் படு ஸ்மூத்தா இருக்கும். கூடவே UFS 4.0 ஸ்டோரேஜ் இருக்க வாய்ப்பிருக்கு. மொத்தத்துல, பெர்ஃபார்மன்ஸ்ல எந்த குறையும் இருக்காதுன்னு நம்பலாம்.
கடைசியா விலை. Lava Agni 4-ன் விலை, இந்தியால Under Rs. 25000-ல இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இதுக்கு முன்னாடி Agni 3, ₹20,999 விலையிலதான் ரிலீஸ் ஆச்சு. 7000mAh பேட்டரி, Dimensity 8350 சிப்செட், 120Hz டிஸ்பிளேன்னு இந்த ரேஞ்ச்-ல இந்த போன் வந்தா, மார்க்கெட்ல இருக்குற மத்த போன்களுக்கு ஒரு டஃப் காம்படீஷன் கொடுக்கும். நம்ம நாட்டு கம்பெனி இப்படி ஒரு தரமான போனை ரிலீஸ் பண்றது நமக்கு ரொம்பவே சந்தோஷமான விஷயம். இந்த போன் பத்தி உங்க கருத்து என்ன? இந்த 7000mAh Battery உங்களுக்கு போதுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்