Lava Agni 4 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் லீக் ஆகியுள்ளன. இதில் Customisable Action Key, Dimensity 8350 சிப்செட்உறுதி செய்யப்பட்டுள்ளன
Photo Credit: Lava
Lava Agni 4: Dimensity 8350, 1.5K AMOLED, 50MP OIS கேமரா, IP64
நம்ம இந்தியன் பிராண்டான Lava-ல இருந்து வர்ற அடுத்த பவர்ஃபுல் போன் Lava Agni 4 பத்தி தினம் தினம் புதுசு புதுசா லீக்ஸ் வந்துட்டே இருக்கு. நவம்பர் 20-ல லான்ச் ஆகப்போற இந்த போனோட முக்கியமான ஸ்பெக்ஸ் மற்றும் ஒரு புதுமையான அம்சமும் இப்போ வெளிய வந்திருக்கு. இந்த போன்ல இருக்குற புது விஷயம் என்னன்னா, அதுல இருக்கிற Customisable Action Key! Apple iPhone-ல இருக்குற மாதிரி, போனோட சைடுல ஒரு பட்டன் இருக்கும். இதுக்கு 100-க்கும் மேற்பட்ட ஷார்ட்கட்களை யூஸர்களே செட் பண்ணிக்கலாமாம். ஒரு ஷார்ட் பிரஸ், டபுள் பிரஸ், லாங் பிரஸ்னு வெவ்வேறு ஃபங்ஷன்களை நம்ம தேவைக்கு ஏத்த மாதிரி மாத்திக்க முடியும். உதாரணத்துக்கு, ஒரு பிரஸ்ல கேமரா ஆன் ஆகும், இன்னொரு பிரஸ்ல ஃபிளாஷ் லைட் ஆன் ஆகும். இது ஒரு பயனுள்ள அம்சம்.
பேட்டரி குறித்து இரண்டு விதமான தகவல் இருக்கு. ஒரு லீக் 7000mAh Battery மற்றும் 80W சார்ஜிங்-ம், இன்னொரு உறுதியான லீக் 5000mAh Battery மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங்-ம் இருக்கும்னு சொல்லுது. அதிகாரப்பூர்வ அறிவிப்புலதான் எது உண்மைன்னு தெரியும்.
மற்ற அம்சங்கள்ல, அலுமினியம் அலாய் மெட்டல் ஃபிரேம், IP64 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ், Stereo Speakers, USB 3.2 மற்றும் IR Blaster போன்றவை இருக்கு. கூடவே, 3 வருஷ OS அப்கிரேட்ஸ் மற்றும் 4 வருஷ செக்யூரிட்டி அப்டேட்களும் உறுதியா இருக்கு.
விலையைப் பொறுத்தவரை, Lava Agni 4 இந்தியாவில் ₹30,000-க்குள் வரும்னு எதிர்பார்க்கப்படுது. Zero Bloatware மற்றும் Free Home Replacement சேவையோட இந்த போன் நவம்பர் 20-ல் லான்ச் ஆகுது.
இந்த Customisable Action Key மற்றும் Dimensity 8350 சிப்செட்-ஓட வர Agni 4 உங்களுக்கு பிடிச்சிருக்கா? இந்த போனை வாங்க நீங்க தயாரா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்