"இதை எதிர்பார்க்கலைல...." - Jio Phone-க்கு அதிரடி ஆஃபர்!

ஜியோ போன் 2019 தீபாவளி சலுகை நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜியோ போன் முதலில் ரூ. 1,500 விலையைக் கொண்டு தொடங்கப்பட்டது

ஹைலைட்ஸ்
  • ஜியோ போன் 2019 தீபாவளி சலுகை தொலைபேசியின் விலையை ரூ. 699
  • வாடிக்கையாளர்களுக்கு ரூ.693 மதிப்பிலான கூடுதல் டேட்டாவை ஜியோ வழங்குகிறது
  • ஜியோ இந்த சலுகையை, இப்போது நவம்பர் 2019 வரை நீட்டித்துள்ளது
விளம்பரம்

ஜியோ போன் தீபாவளி 2019 சலுகையை, ஜியோ கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அந்த பண்டிகை காலத்தில் ஜியோ போனின் விலை ரூ. 699 ஆகும். ஜியோ இந்த சலுகையை, இப்போது நவம்பர் 2019 வரை நீட்டித்துள்ளது.

"ஜியோ போன் தீபாவளி சலுகையின் கீழ், ஜியோ போன் கடந்த 3 வாரங்களில் முன்னோடியில்லாத வகையில் சாதனையைக் கண்டது. இதன் காரணமாக, ஜியோ கூடுதலாக 1 மாதம் (நவம்பர்) வரை தொடர முடிவு செய்துள்ளது. ஜியோ போன் தீபாவளி சலுகையின் போது ஜியோ இயக்கத்தில் சேர முடியாத அம்சமான தொலைபேசி பயனர்கள், இப்போது பண்டிகை சலுகையின் பலன்களைப் பெற மேலும் ஒரு மாதத்தைப் பெற்று ஜியோ டிஜிட்டல் லைஃப்க்கு இடம்பெயர்ந்துள்ளனர் ”என்று ஜியோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் Jio Phone-ன் விலை மற்றும் சலுகைகள்:

ஜியோ போன் தீபாவளி 2019 சலுகையின் ஒரு பகுதியாக, 4G-enabled ஜியோ போனை ரூ. 699-க்கு வாங்கலாம். இதன் அசல் விலையான ரூ. 1,500-ல் இருந்து ரூ.801 தள்ளுபடி செய்யப்படுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 693 மதிப்பிலான டேட்டா நன்மையை, ரூ. 99 மதிப்பிலான ஏழு ரீசார்ஜ்களுக்கு செல்லுலார் டேட்டாவை வழங்குகிறது.

இருப்பினும், கூடுதல் சலுகைகளைப் பெறுவதற்காக மாதத்திற்கு 99 ரூபாய், குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யவேண்டும். வாங்குபவர்கள் ஜியோ சிம்மையும் சலுகையுடன் வாங்க வேண்டும். ஜியோ போன் தீபாவளி 2019 சலுகை இப்போது நேரலையில் உள்ளது. இது நவம்பர் மாதம் முழுவதும் நடைபெறும். இந்த பக்கத்தில், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி மேலும் அறியலாம்.


Jio Phone-ன் விவரக்குறிப்புகள்:

ஜியோ போன் KaiOS-ஆல் இயங்குவதோடு 2.4-inch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 512MB RAM உடன் இணைக்கப்பட்டு, 1.2GHz dual-core processor-ஆல் இயக்கப்படுகிறது. இந்த போன் 4GB இண்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. மேலும், microSD card  (128GB வரை) ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கு இடமளிக்க முடியும். இது Wi-Fi இணைப்பை ஆதரிப்பதோடு, 2,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வருகிறது. இந்த போன், Google Assistant ஆன்போர்டில் வருகிறது. மேலும் 22 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. மேலும், பிரபலமான செயலிகளான Facebook, Google Maps, WhatsApp மற்றும் YouTube போன்றவற்றிற்கான ஆதரவு உள்ளது.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. Samsung ரசிகர்களே, ஜாக்கிரதை! 6 வருஷத்துக்கு அப்புறம் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீட் மாறுது
  2. Star Wars ஃபேன்ஸ்-க்கு Oppo-வோட சர்ப்ரைஸ்! Reno 14F Limited Edition பத்தி தெரிஞ்சுக்கோங்க
  3. உங்க Oppo OnePlus போன்ல Android 16 அப்டேட் வந்துருச்சா? AI Features & புது டிசைன் மிரட்டல்
  4. பட்ஜெட்-ல Nothing டிசைன்! Phone 3a Lite லான்ச்! Glyph Light-உடன் மிரட்டலான அம்சங்கள்
  5. உங்க Pixel போன் இன்னும் ஸ்மார்ட் ஆகிடுச்சு! Messages-ல போட்டோவை Remix பண்ணலாமா? மிஸ் பண்ணாதீங்க
  6. Samsung Galaxy போன்ல புது Spyware தாக்குதல்! WhatsApp மூலமா வந்த ஆபத்து நீங்க செக் பண்ணீங்களா?
  7. Vivo-ன் அடுத்த பவர்ஃபுல் மாடல்! 7000mAh பேட்டரி 1.5K AMOLED Display! விலை என்ன தெரியுமா?
  8. Apple மாதிரி Action Key-ஆ? Lava Agni 4-ன் மிரட்டல் லீக்ஸ்! ₹30,000-க்கு கம்மி விலையில் இந்தியன் கிங்
  9. Airtel-ல ரீசார்ஜ் விலை ஏறுது! வெறும் வாய்ஸ் மட்டும் வேணுமா? இனி எவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சுக்கோங்க!
  10. Samsung Galaxy S26, S26+ : Raised Camera Island உடன் வடிவமைப்பு மாற்றம் லீக்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »