ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான பொது கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஜியோ ஃபோனில் சில மாற்றங்கள் செய்து புதுப்பிக்கப்பட்ட பல வசதிகளுடன் ஜியோ போன் 2 என்ற பெயரில் ஜியோவின் அடுத்த படைப்பு வெளியாகிறது. வாட்ஸ் அப், யூ ட்யூப் ஆகிய பயன்பாடுகளை இந்த ஜியோ போன் 2 வில் பயன்படுத்த முடியும். ப்ளாக்பெர்ரி போன் மாடலை போன்ற குவார்டி கீ பேடு மாடலில் இதன் கீ பேடு டிஸைன் செய்யப் பட்டுள்ளது. அதோடு இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் ஜியோ கிகா ஃபைபர் பிராட்பேண்டு சேவை அறிமுகப் படுத்தப்பட்டது.
ஜியோ போன் 2 விலை
ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி முதல் இந்த ஜியோ போன் 2 விற்பனைக்கு வர உள்ளது. இதன் அறிமுக விலை 2,999 ரூபாய் மட்டுமே. மேலும், ஜியோ ஃபோன் மன்சூன் ஹங்காமா தள்ளுபடியில் ஜியோ போன் 1 வாடிக்கையாளர்கள், 501 ரூபாய்க்கு எக்ஸ்சேஞ் செய்து கொள்ளலாம். இந்த ஆஃபர் வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
ஜியோ போன் 2 குறிப்புகள்
நானோ டூயல் சிம் கொண்ட ஜியோ போன் 2, 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. KAI ஓ.எஸ் பயன்பாட்டில் இது செயல் படுகிறது. 512 எம்.பி மெமரி RAM, 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இதில் உள்ளது. 128 ஜிபி எக்ஸ்பாண்டபிள் மெமரி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. 2 மெகா-பிக்ஸல் பின் கேமராவுடனும், விஜிஏ ஃப்ரெண்ட் கேமராவும் உள்ளது. 2000mAh பேட்டரி பவருடன், VoLTE, VoWiFi, NFC, ஜி.பி.எஸ், ப்ளூடூத், எஃப்.எம் ரேடியோ ஆகிய வசதிகளும் இதில் உள்ளன. LTE Cat4 DL: 150 Mbps/UL:50 Mbps வசதியும், LTE பேண்ட் 2,5,40,2G பேண்ட் 900/1800 ஆகியவையும் உள்ளது. குவார்டி கீ பேடு தவிர, நான்கு வழி நாவிகேஷன் கீ, வாய்ஸ் கமாண்டிற்கான பட்டன் ஆகியவையும் உள்ளது.
முன்னதாக, ஜியோ ஃபோன்களில் கூகுள் அசிஸ்டண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது யூ ட்யூப், வாட்ஸ் அப் போன்ற செயலிகளும் இதில் இணைந்துள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்