விவோவின் துணை பிராண்டான ‘ஐகியூ'தனது முதல் ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 1ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்கிறது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 855 SoC கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனை பற்றிய பல முக்கிய தகவல் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் போனின் இறுதி விலை பற்றிய தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வெய்போவில் வெளியான தகவல்படி, விவோ போன்களின் ரசிகர்களை அறிமுக விழாவிற்காக முன்பதிவு செய்துகொள்ளும் படி அழைப்பு விடுத்துள்ளது. இதில் தேர்வாகும் ரசிகர்களை சீனாவுக்கு அழைத்துவர அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிடப்பட்ட டீஸரில் ‘மான்ஸ்டர் இன்சையிட்' என்ற தகவல் மற்றுமே இடம்பெற்றிருந்தது.
இது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸ்சரை குறிக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கெனவே வெளியான தகவல்கள் படி 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் 4000mAh பேட்டரி பவர் மற்றும் 44W வேகமாக சார்ஜ் செய்யும் வசதி என பல முக்கிய வசதிகள் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கசிந்துள்ள தகவல் படி, இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட், 2018ல் விவோ அறிமுகம் செய்த சூப்பர் ஹெச்டிஆர் கேமரா தொழிநுட்பம் போன்றவை இடம்பெறும் என தெரிகிறது. மேலும் சமீபத்தில் இந்த புதிய போனின் பின்புற தோற்றத்தையும் ஐகியூ நிறுவனம் வெளியிட்டது. அந்த புகைப்படத்தில் 3 கேமராக்கள் இடம்பெற்ற நிலையில் அவைகளின் குறிப்பை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடியவில்லை.
வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த போனை பற்றிய தகவலுக்காக நெடுநாட்கள் காத்திருக்க தேவையில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்