iQoo Neo 3 5G சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த போனில் டிரிபிள் ரியர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஸ்னாப்டிராகன் 865 செயலியால் இயக்கப்படுகிறது. போனின் விலை மற்றும் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.
6 ஜிபி + 128 ஜிபி சிஎன்ஒய் 2,698 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.28,900)
8 ஜிபி + 128 ஜிபி சிஎன்ஒய் 2,998 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,100)
12 ஜிபி + 128 ஜிபி சிஎன்ஒய் 3,298 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.35,400)
8 ஜிபி + 256 ஜிபி சிஎன்ஒய் 3,398 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36,400)
iQoo Neo 3 5G நைட் பிளாக் மற்றும் ஸ்கை ப்ளூ கலர் ஆப்ஷன்களில், ஏப்ரல் 29 முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.
Vivo iQoo, iQoo Neo, iQoo Pro, Other Older iQoo Phones to Receive iQoo UI Update Starting Mid-June
இந்த போன் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 உடன் iQoo UI-ல் இயங்குகிறது. இந்த போன் 6.57 அங்குல முழு எச்டி + (1,080x2,408 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலியால் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
போனின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபிகளுக்கு, 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இதில் Night View, Portrait, slow motion, time-lapse photography, professional mode, AR cute shot, short video, PDAF மற்றும் smart image recognition ஆகியவை அடங்கும்.
இந்த போன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை உள்ளது. இந்த போன் 163.71x75.55x8.93 மிமீ அளவு மற்றும் 198.1 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்