மார்க்கெட்டையே அதிரவைக்க iQOO ரெடி! Neo 11-ல் இத்தனை அம்சங்களா? 2K டிஸ்ப்ளே, Snapdragon சிப், 100W சார்ஜிங்!

iQOO நிறுவனம் தனது அடுத்த ஜெனரேஷன் மாடலான iQOO Neo 11-ஐ சீனாவில் வெளியிடத் தயாராகிவிட்டது

மார்க்கெட்டையே அதிரவைக்க iQOO ரெடி! Neo 11-ல் இத்தனை அம்சங்களா? 2K டிஸ்ப்ளே, Snapdragon சிப், 100W சார்ஜிங்!

Photo Credit: iQOO

iQOO Neo 11 அக்டோபர் 30ல் லான்ச்; 7,500mAh பேட்டரி, 100W சார்ஜிங், 2K OLED 144Hz டிஸ்ப்ளே, Snapdragon 8 Elite

ஹைலைட்ஸ்
  • அக்டோபர் 30 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி
  • 7,500mAh என்ற மிகப்பெரிய பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
  • 2K OLED 144Hz டிஸ்ப்ளே மற்றும் Snapdragon 8 Elite சிப்செட் இதில் இடம்பெறு
விளம்பரம்

இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி, கேமிங் போன் செக்மென்ட்ல iQOO Neo சீரிஸ் ரொம்ப பாப்புலர். அந்த வரிசையில, அடுத்த தரமான மாடலை ரிலீஸ் பண்ண iQOO ரெடியாகிட்டாங்க! அதுதான் iQOO Neo 11. இந்த போன் சீனாவில் அக்டோபர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவா, ஃபிளாக்ஷிப் போன்கள்ல 5,000mAh பேட்டரியே பெரிய விஷயம் தான். ஆனா, iQOO இப்போ அதை எல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி 7,500mAh மெகா பேட்டரியை இந்த Neo 11-ல கொடுத்திருக்காங்க. இவ்வளவு பெரிய பேட்டரியை, உயர்தர 2K டிஸ்ப்ளேவோட கொடுத்த முதல் ஃபிளாக்ஷிப் போன் இதுதான் என்று கம்பெனியே பெருமையா சொல்லியிருக்காங்க. கூடவே, இந்த பெரிய பேட்டரியை வேகமா சார்ஜ் செய்ய 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்குன்னு எதிர்பார்க்கப்படுது. இதனால, கேமிங் செஷன்ஸ்ல இனி பேட்டரி பத்திய கவலையே இல்ல.
 

பர்ஃபார்மன்ஸ் அசுரன் - சிப்செட்:

இந்த போன்ல என்ன ப்ராசஸர் இருக்கும்னு நிறைய நாள் சஸ்பென்ஸ் இருந்துச்சு. ஆனா, லீக்கான தகவல்கள் மற்றும் Geekbench லிஸ்டிங் மூலமா, இதில் சக்தி வாய்ந்த Snapdragon 8 Elite ஃபிளாக்ஷிப் சிப்செட் தான் இருக்கும்னு கிட்டத்தட்ட உறுதி ஆகியிருக்கு. இதனால, வேகத்துல எந்த சமரசமும் இருக்காது.
இதுதவிர, இந்த போன் 16GB RAM மற்றும் Android 16 அடிப்படையிலான புதிய OriginOS 6 இயங்குதளத்துடன் வெளிவரலாம்னு எதிர்பார்க்கப்படுது.
டிஸ்ப்ளே மற்றும் மற்ற சிறப்பம்சங்கள்:

  • டிஸ்ப்ளே: கேமிங் அனுபவத்துக்கு ஏற்ற மாதிரி, இதில் 2K ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட OLED ஃபிளாட் டிஸ்ப்ளே இருக்கு. இது கண்களுக்கு அதிகப்படியான வெளிச்சத்தை குறைக்க உதவும் Anti-Reflective Coating உடன் வருகிறது.
  • செக்யூரிட்டி: வேகமான மற்றும் துல்லியமான பாதுகாப்புக்காக, இது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை (Ultrasonic In-Display Fingerprint Sensor) பயன்படுத்தலாம்.
  • கேமரா: கேமராவைப் பொறுத்தவரை, பின்னாடி 50MP பிரைமரி கேமரா (OIS உடன்) மற்றும் ஒரு அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
  • வண்ணங்கள்: இந்த போன் பிளாக் (Black), சில்வர் (Silver), மற்றும் வித்தியாசமான டெக்ஸ்சருடன் கூடிய ப்ளூ நியான் (Blue Neon), பிக்ஸல் ஸ்கொயர் ஆரஞ்சு (Pixel Square Orange) போன்ற வண்ணங்களில் வரவுள்ளது.

சீனாவில் லான்ச் ஆன பிறகு, iQOO Neo 11 இந்தியாவின் பட்ஜெட் ஃபிளாக்ஷிப் மார்க்கெட்டையும் அதிரச் செய்யும்னு எதிர்பார்க்கப்படுது. இந்திய விலை ₹35,000 ரேஞ்சில் இருக்கலாம்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. முழு விவரங்களையும் அக்டோபர் 30-ம் தேதி பார்க்கலாம்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
#சமீபத்திய செய்திகள்
  1. WhatsApp Group-களில் இப்போ @all யூஸ் பண்ணலாம்! முக்கியமான அறிவிப்புகள் இனி எல்லாருக்கும் உடனே போகும்!
  2. JioSaavn-ல் விளம்பரம் இல்லாம பாட்டு கேட்க ஆசையா? ரூ.399-க்கே 1 வருடம் சப்ஸ்கிரிப்ஷன்
  3. iQOO 15-ன் பர்ஃபார்மன்ஸை இனி இந்தியாவிலும் பார்க்கலாம்! Snapdragon 8 Elite Gen 5, OriginOS 6 உடன் நவம்பரில் வருகிறது!
  4. OnePlus-ன் கேமிங் ராட்சசன்! Ace 6-ல் இதுதான் டாப்: Snapdragon 8 Elite, 165Hz ஸ்கிரீன், ரெக்கார்டு பிரேக் பேட்டரி
  5. மார்க்கெட்டையே அதிரவைக்க iQOO ரெடி! Neo 11-ல் இத்தனை அம்சங்களா? 2K டிஸ்ப்ளே, Snapdragon சிப், 100W சார்ஜிங்!
  6. கேமரா, பேட்டரி, பர்ஃபார்மன்ஸ் – எல்லாத்துலேயும் டாப்! Realme GT 8 Pro லான்ச்! விலையோ ₹49,440-ல் இருந்து ஆரம்பம்
  7. Samsung Galaxy XR ஹெட்செட் அறிமுகம் – Snapdragon XR2+ Gen 2, AI திறன்! வாங்க ரெடியா?
  8. கேமிங் பிரியர்களுக்கு விருந்து! iQOO 15 வந்துருச்சு – 100x Zoom, மூணு 50MP கேமரா!
  9. வாட்ஸ்அப் யூசர்களே, இனி ChatGPT வேலை செய்யாது! WhatsApp-ன் புதிய விதிமுறைகள்
  10. Redmi K90: 7,100mAh பேட்டரி, Bose ஆடியோ உடன் அக்டோபர் 23ல் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »