Photo Credit: Josh Hillard / iDrop News
ஆப்பிள் நிறுவனத்தில் ஐபோனின் சமீபத்திய வெளியிடான ‘ஐபோன் XS', அமெரிக்காவில் தீப்பிடித்து எறிந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இது குறித்து ஐட்ராப் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹில்லார்டு. அவர் சில நாட்களுக்கு முன்னர் புதிய ஐபோன் XS, போனை வாங்கியுள்ளார். ஒரு நாள் ஹில்லார்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தனது பேன்ட் பின் பாக்கெட்டில் வைத்திருந்த XS போனிலிருந்து கருகும் நாற்றம் வந்துள்ளது. அவர் போனை எடுத்துப் பார்த்தால், அது குபுகுபுவென எறிந்துள்ளது. பச்சை மற்றும் நீல நிறப் புகை அவர் உட்கார்ந்திருந்த அறையையே சூழ்ந்ததாம்.
இதைத் தொடர்ந்து எறிந்த ஐபோனை, அருகிலிருந்த ஆப்பிள் ஸ்டோருக்கு எடுத்துச் சென்றுள்ளார். அவர்கள், ‘இந்த போன் உடனடியாக தயாரிப்பு இடத்தில் இருக்கும் பொறியாளர்களிடம் அனுப்பப்பட வேண்டும். உங்களுக்கு நாங்கள் புதிய போனை வாங்கித் தருகிறோம்' என்றுள்ளனர்.
ஆனால், இந்த சம்பவத்தில் ஹில்லார்டின், பேன்ட் மற்றும் காலனிகள் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. அவரின் உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ‘போனை மாற்றித் தருகிறோம்' என்று நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டதை அவரால் ஏற்க முடியவில்லை. தொடர்ந்து சட்ட ரீதியாக இந்த விஷயத்தை ஹில்லார்டு அணுக உள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் ஐபோன் XS போன் ஒன்றில், மென்பொருள் அப்டேட் செய்யும் போது வெடித்தச் செய்தி பரவலானது. இந்நிலையில் அடுத்ததாக இப்படியொரு தகவல் வந்துள்ளது.
தற்போது நடந்துள்ள சம்பவம் குறித்து ஆப்பிள் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்