அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐ ஃபோன் நியூ மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சம் ரூ. 1.44 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்
புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 3 புதிய மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. எக்ஸ். எஸ்- விட, மேக்ஸ் சற்று அளவில் பெரியது. எக்ஸ்.எஸ். 5.8 இன்ச் அளவுள்ளதாகவும், மேக்ஸ் 6.5 இன்ச் அளவுள்ளதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதிய ஃபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஆப்பிள் பார்க்கின் ஸடீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற்றது.
இரட்டை சிம்களை பயன்படுத்தும் வசதி இந்த புதிய மாடல்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜிகாபைட்-கிளாஸ் எல்.டி.இ. வேகத்தில் புதிய மாடல்கள் செயல்படும். அதுமட்டுமின்றி ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.
உலகிலேயே நம்பர் ஒன் ஸ்மார்ட் ஃபோன் இதுதான் என்று ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் கூறியுள்ளார். புதிய மாடல் ஐ ஃபோன்கள் திருப்திகரமாக உள்ளதென்று 98 சதவீத வாடிக்கையாளர்கள் கமென்ட் செய்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் iPhone XS – -ன் விலை, 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட ஃபோன் ரூ. 71,800- ஆகவும். 256 ஜிபி வகை ரூ. 82,600- ஆகவும், 512 ஜி.பி. வகை ரூ. 97,000- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
iPhone XS Max - ன் விலை, 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட ஃபோன் ரூ. 79,000- ஆகவும். 256 ஜிபி வகை ரூ. 89,800- ஆகவும், 512 ஜி.பி. வகை ரூ. 1,04,200- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
| Internal Storage | iPhone XS Price in India | iPhone XS Max Price in India |
|---|---|---|
| 64GB | Rs. 99,900 ($999 in the US | Rs. 1,09,900 ($1,099 in the US |
| 256GB | Rs. 1,14,900 ($1,149 in the US) | Rs. 1,24,900 ($1,249 in the US) |
| 512GB | Rs. 1,34,900 ($1,349 in the US) | Rs. 1,44,900 ($1,449 in the US) |
இரண்டு மாடல்களையும் செப்டம்பர் 14-ந்தேதியில் இருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம். 21-ம் தேதியில் இருந்து ஷிப்பிங் தொடங்கி விடும். கிரே, சில்வர் நிறங்களுடன் தங்க நிறத்திலும் இந்த மாடல் ஃபோன்கள் சந்தைக்கு வந்துள்ளன.
இரு மொபைல்களும் ஐ.ஓ.எஸ் 12- இயங்கு தளத்தில் செயல்படுகிறது. XS-யை பொருத்த வரையில் 5.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. XS Max- பொருத்தவரையில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே அதில் பொருத்தப்பட்டுள்ளது. ஃபிங்கர் பிரின்ட் செக்யூரிட்டி சிஸ்டம், 7 நானோ மீட்டர் பிராசஸர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
![]()
ஐஃபோன் எக்ஸை விடவும் XS ஃபோன் 30 நிமிடங்களும், XS Max 1 மணி நேரம் 30 நிமிடங்களும் கூடுதலாக சார்ஜ் நிற்கும். இன்பீல்டை பொருத்தவரையில், 64 ஜிபி, 256 ஜிபி, 516 ஜிபி என மூன்று வகைகளில் புதிய மாடல்கள் கிடைக்கின்றன. மெமரியின் அளவு அதிகரிப்புக்கு ஏற்ப விலை ஏற்றம் உள்ளது. ஃபேஸ் ஐடி அன்லாக் சிஸ்டம், 12 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, 7 மெகா பிக்ஸ்ல் முன்பக்க கேமரா ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
NOAA Issues G2 Solar Storm Watch; May Spark Auroras but Threaten Satellite Signals
Naanu Matthu Gunda 2 Now Streaming on ZEE5: Where to Watch Rakesh Adiga’s Emotional Kannada Drama Online?