ஆப்பிள் ஷோ-ரூம்களில் தவணை முறையில் பெறும் வசதியும் இடம் பெற்றுள்ளது
ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் ஆகியவை ஐபோனின் லேட்டஸ் மாடல்கள்
லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களான ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய நேரப்படி, மாலை 6 மணி முதல் விற்பனைக்கு வர உள்ளது என்று ஆப்பிள் இந்தியா அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலமாகவும், ஆப்பிள் ஸ்டோர்களிலும் இந்த ஐபோன்கள் விற்பனைக்கு வர உள்ளன. ஐபோன் XS போனின் ஆரம்ப விலை 99,000 ரூபாய். ஐபோன் XS மேக்ஸ் ஆரம்ப விலை 1,09,990 ரூபாய் ஆகும். ஏர்டெல் ஆன்லைன், ப்ளிப்கார்டு, ஜியோ.காம் ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கியுள்ளது. மேலும், ஆப்பிள் ஷோ-ரூம்களில் தவணை முறையில் பெறும் வசதியும் இடம் பெற்றுள்ளது
64 ஜிபி ஐபோன் XS விலை 99,990 ரூபாய்க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது 1,14,990 ரூபாய்க்கும், 512 ஜிபி கொண்டது 1,34,990 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஐபோன் XS மேக்ஸ் போன் பொறுத்தவரை, 64 ஜிபி, 1,09,990 ரூபாய்க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது 1,24,990 ரூபாய்க்கும், 512 ஜிபி கொண்டது 1,44,990 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26 FE Camera Specifications Leaked Ahead of Expected Launch, May Reuse Its Predecessor's Main Rear Camera