அடுத்த ஐபோனில் என்னென்ன அப்டேட்கள் வருகிறது தெரியுமா?

அடுத்த ஐபோனில் என்னென்ன அப்டேட்கள் வருகிறது தெரியுமா?

Photo Credit: Forbes

ஹைலைட்ஸ்
  • இந்த ஆண்டு ஐபோனின் அப்டேட்டட் வெர்ஷனை வெளியிடும் ஆப்பிள்
  • இதன் புகைப்படங்கள் தற்போது லீக் ஆகியுள்ளது
  • ஐபோனின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
விளம்பரம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்பது பல ஆண்டுகளாக ஸ்மார்ட் போன் மார்கெட்டில் கோலோச்சி வரும் ஒரு சாதனம். முதன் முதலாக வெளிவந்த ஐபோனுக்கும் தற்போது வரும் ஐபோனுக்கும் ஒரு மலையளவு வித்தியாசங்கள் உள்ளன. இதற்குக் காரணம், ஆப்பிள் தனது அப்டேட்களில் செலுத்தி வரும் அதிக கவனம் தான். இந்த ஆண்டு மட்டும் ஆப்பிள் மூன்று வகை ஐபோனை வெளியிட உள்ளது. இந்த ஐபோனின் டிசைன் புகைப்படங்கள் தற்போது `ஃபோர்ப்ஸ்' இதழில் லீக் ஆகியுள்ளது. இதை வைத்து அடுத்த வரப் போகும் ஐபோன் எக்ஸ் ப்ளஸ் போனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்று யூகிக்க முடியும்.
iphonex main forbes iPhone X Budget

Photo Credit: Forbes

இதில் 6.1 இன்ச்சுடன் சாதாரண டிஸ்ப்ளே கொண்ட பட்ஜெட் வெர்ஷன் ஒன்று. இதற்கடுத்து ஓலெட் டிஸ்ப்ளேவுடன் வரப் போகும் மிடில் வெர்ஷன். கடைசியாக வரும் ஆடம்பர போன், 6.5 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே கொண்டதாகவும் 3டி டச் டிஸ்ப்ளே, ஓலெட் வசதி கொண்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ப்ரீமியம் வகை போனில் தான் ஒரு குறிப்பிடத்தகுந்த வகையிலான மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் பின்புறத்தில் 3 கேமராக இருக்கும் என்று டிசைன் லீக் வைத்து யூகிக்க முடிகிறது. இந்த மூன்று கேமராக்களும் செங்குத்தான நிலையில் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால், மிகச் சிறந்த போட்டோக்கள் எடுக்க முடியும் என்று தெரிகிறது. மேலும், தன் தயாரிப்புகளில் பல மாற்றங்களை செய்துள்ளதால், இனி வரும் ஐபோன்களின் விலையை ஆப்பிள் குறைக்கும் எனப்படுகிறது. இதற்கு இன்னொரு காரணம், `ஆப்பிள் போன் என்றாலே காஸ்ட்லி தான்' என்பது போன்ற பிம்பம் நிலவுவது அந்நிறுவனத்துக்கே பிடிக்கவில்லை என்றும் உள் வட்டாரத் தகவல் சொல்லப்படுகிறது. முக்கியமாக இந்த வருடம் வெளியாகப் போகும் ஐபோனில் கண்டிப்பாக பெரிய பேட்டரிகளும் டூயல் சிம் கார்டுகளும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, iPhone X Plus, iPhone, iPhone X
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »