ஐபோன் 9 மற்றும் ஐபோன் எக்ஸ் பிளஸ் ஆகியவற்றின் டம்மி மாடல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்துள்ளன
Photo Credit: Shai Mizrachi/ 9to5Mac
இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மூன்று வகை ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 8க்கு மாற்றாக 6.1 இன்ச் எல்.சி.டீ டிஸ்ப்ளே உடன் கூடிய மாடல், ஐபோன் எக்ஸின் தொடர்ச்சியாக ஓ.எல்.ஈ.டீ டிஸ்ப்ளே உடன் வருகிற மாடல் மற்றும் பிரதான மாடலான 6.5 இன்ச் ஓ.எல்.ஈ.டீ வருகிற ஐபோன் எக்ஸ் ப்ளஸ் ஆகிய மூன்று ஐபோன் மாடல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த மூன்று மாடல்களும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற நிகழ்வில் வெளியிட ஆப்பிள் திட்டமிட்டிருப்பதாக பேசப்பட்டது. பல்வேறு வதந்திகளுக்கு மத்தியில் தற்போது ஐபோன் 9 மற்றும் ஐபோன் எக்ஸ் பிளஸ் ஆகியவற்றின் டம்மி மாடல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்துள்ளன.
தொழில்நுட்ப வல்லுனர் டிப்ஸ்டர் ஷாய் மிஸ்ராச்சி வெளியிட்டுள்ள வீடியோவில், 2018ம் ஆண்டு வரவிருக்கின்ற ஆப்பிள் ஐபோன்கள் மூன்றில் இரண்டு மாடல்களை (ஐபோன் 9 மற்றும் ஐபோன் எக்ஸ் ப்ளஸ்) வெளியிட்டிருந்தார். கூடுதலாக அந்த வீடியோவில், இந்த டம்மி மாடல்களுக்கான ஆக்ஸசரீஸ் தயாரிக்கும் ஸ்கேஸ்ட் நிறுவனத்தின் மொபைல் கேஸும் பார்க்க முடிகிறது. இதன்மூலம் மொபைலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னரே மொபைல் கேஸ் தயாரிக்க தொடங்கிவிட்டனர். கேஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் தான் இதுபோன்ற தகவல் கசிவதற்கான ஆதாரங்கள். ஏனென்றால் மொபைல் வெளியிடப்படும் முன்னரே மாடல் குறித்த தகவல்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு, மொபைல் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் போது மொபைல் கேஸும் வெளியிடுவதை உறுதி செய்வதற்காக அவ்வாறு செய்யப்படுகிறது.
வீடியோவில் காணப்படும் ஐபோன் எக்ஸ் ப்ளஸ் மாடலில், மொபைல் சைஸ் ஐபோன் 8 ப்ளஸ்ச் போலவே தான் உள்ளது, ஆனால் சற்று பெரிய 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஏனெனில் ஐபோன் 7 ப்ளஸ் பயன்படுத்தப்பட்டுள்ள பீசல்ஸ் அம்சம் ஐபோன் எக்ஸ் ப்ளஸில் இருக்காது.
இதற்கிடையில் ஐபோன் 9 என அழைக்கப்படும் 6.1 இன்ச் மாடல் தொடக்க நிலை ஆப்பிள் ஃபோனாக வர இருக்கிறது. முன்னர் வந்த தகவல்களின் படி இந்த மாடல் ஐபோனில் எல்சிடீ பேனலுடன் $600 (சுமார் ரூ. 40,300) மற்றும் $700 (சுமார் 47,000) விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. கடந்த மாதம் 2018 ஐபோன் மாடல்களின் 3டீ வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில், புதிய மூன்று மாடல்களும் முந்தைய தலைமுறை ஐபோன் மாடல்களுடன் ஒப்பிட்டு காட்டப்பட்டது. இந்த புதிய வீடியோவில் உள்ள விஷயங்கள் பெரும்பாலும் முன்னர் பார்த்தவைகள் தான்.
ஐபோன் டம்மிக்களின் முன்பக்கம் டிஸ்ப்ளே மோல்டிங் காட்டவில்லை. எனினும் இந்த 2018 மாடல்கள் அனைத்திலும் எதிர்பார்க்கப்பட்ட ரியர் கேமரா செட்டப் இருக்கிறது. குறிப்பாக இந்த வீடியோவில் எதிர்பார்க்கப்படட் 5.8 இன்ச் ஓஎல்ஈடீ மாடல் காட்டப்படவில்லை. சுவாரஸ்யமாக மிஸ்ராச்சி மற்றுமொரு ஆச்சரியம் வர இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?