உலகின் சில முக்கிய பிரீமியம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஆப்பிளும் ஒன்று. உலகின் மற்ற நாடுகள் மட்டுமின்றி, இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான் மோகம் சற்றும் கூட குறைந்ததில்லை. ஆனால், அதிகபடியான இந்தியர்கள், ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை வாங்காமல் இருப்பதற்கு காரணம் இதன் விலை. இந்த ஸ்மார்ட்போன்கள், இந்தியாவிற்கு வெளியில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதால், வரிகள் காரணமாக இதன் விலை உச்சத்தில் உள்ளது. ஆனால், தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிற்குள்ளேயே உற்பத்தியாகிறது. அதனால், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் XR மற்றும் ஐபோன் XS ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களை பாக்ஸ்கான் (Foxconn) என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
முன்னதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருந்த தகவலில், பரவலாக ஹான் ஹோய் தொழிற்சாலை (Hon Hai Precision Industry) என்று அழைக்கப்படும் பாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம், ஐபோன் X வரிசை ஸ்மார்ட்போன்களை தயாரிக்க தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்குள் ஒரு உற்பத்தி நிலையத்தை துவங்கும். மேலும், ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் விஸ்டர்ன் கார்ப் (Wistron Corp) நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்தின் மூலமாக குறைந்த விலை ஐபோன் SE, ஐபோன் 6S, ஐபோன் 7 ஆகிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள், லட்சக்கணக்கான இந்தியர்களின் விருப்ப ஸ்மார்ட்போனாக இருந்தாலும், இதன் அதிக விலை காரணமாக வெறும் 1 சதவிகிதம் சந்தை பங்கை மட்டுமே வைத்துள்ளது.
'இந்த ஸ்மார்ட்போன்களின் உள்நாட்டு தயாரிப்பால், ஐபோன்களின் விலையை குறைத்து விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறது' என ருஷாப் தோஷி (Rushabh Doshi),
தொழில்நுட்ப ஆலோசனை கேனலிஸில் ஆராய்ச்சி இயக்குனர் கூறியுள்ளார்.
இம்மாதிரியான உள்நாட்டு தயாரிப்பு, ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்கும், அதுமட்டுமின்றி தன் சொந்த கடைகளை இந்தியாவில் துவங்க ஆப்பிள் நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும்.
முன்னதாக விஸ்டர்ன் கார்ப் (Wistron Corp) நிறுவனம் ஐபோன் SE, ஐபோன் 6S, ஐபோன் 7 ஆகிய ஸ்மார்ட்போன்களை தயாரித்து ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த தகவலை விஸ்டர்ன் கார்ப் நிறுவனம் மறுத்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்