ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிட இருக்கிற நிலையில் வழக்கம் போலவே பல்வேறு வதந்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த 2018 ஐபோன் மாடல்களில் வருகின்ற தொழில்நுட்பங்களைப் பற்றி பல்வேறு கனிப்புகளும் இருந்து வருகிறது. எனவே சில பிரபலமான தளங்களில் இதன் மாடல்கள் வெளிவருவதை தவிர்க்க முடியாது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மூன்று புதிய ஐபோன் மாடல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒன்றின் மாடல் கீக்பெஞ்ச் தளத்தில் காணப்பட்டது. இந்த பட்டியலில் ஐபோன் புதிய மாடலின் சில விவரங்கள் வெளியிடபட்டுள்ளன. அதன்படி ஐஓஎஸ் 12, 4 ஜீபி ரேம் மற்றும் ஒரு புதிய ப்ராசஸர் என பலவும் இந்த மாடலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விவரப் பட்டியலின் படி 2018 ஐபோன் மாடல்களில் ஒரு மாடல் ஐபோன் எக்ஸை விட சற்று மேம்பட்ட அம்சங்களுடன் வரும். அந்த மாடல் ஆப்பிளின் இன்டெர்னல் கோட் ‘ஐபோன் 11,2’ கீழ் பட்டியலிடப்பட்டு டீ321 ஏபி மதர்போர்டுடன் வருகிறது. மேலும் இந்த பட்டியல், புதிய ஐபோன் கடந்த வாரம் பரிசோதிக்கப்பட்டதை காட்டுகிறது. இந்த விவரங்கள், புதிய போன் 2017 ஐபோன் மாடல்களில் உள்ள ஏ11 பயோனிக் சிப்களின் குணாதிசியங்களைக் கொண்ட ஏஆர்எம் ப்ராசஸருடன் இருப்பதாக கூறுகிறது. இது ஆறு கோர் மற்றும் 2.49 ஜிகாஹெர்ட்ஸ் பேஸ் ஃப்ரீக்குவன்சி உடன் வருகிறது. இது ஐபோன் எக்ஸை (2.39 ஜிகாஹெர்ட்ஸ்) விட சற்று அதிகம். எனினும் இந்த ’ஐபோன் 11,2’ மாடல், 2018ல் வெளியாக இருக்கிற எந்த மாடலை குறிக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று மாடல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது - ஐபோன் 8-ற்கு மாற்றாக எல்சிடீ டிஸ்ப்ளே உடன் வருகிற 6.1 இன்ச் பட்ஜெட் மாடல், ஐபோன் எக்ஸ் அடுத்த வெர்ஷனான ஓஎல்ஈடீ டிஸ்ப்ளே உடன் வருகிற மாடல் மற்றும் ப்ரீமியம் மாடலான 6.5 இன்ச் ஓஎல்ஈடீ டிஸ்ப்ளே உடன் ஐபோன் எக்ஸ் ப்ளஸ் மாடல். இந்த பட்டியலின் படி அந்த குறிப்பிட்ட ஐபோன் மாடல் கடந்த ஆண்டை விட ஒரு ஜீபி அதிகமாக 4 ஜீபி ரேம் உடன் வருகிறது. கூடுதலாக லெவல் 1 இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் டேட்டா கேட்ஷஸ் 32 KB லிருந்து 128KB வரை உயர்ந்துள்ளன.
ரேமில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த ஐபோன் மாடல் சிங்கிள் கோர் செயல்திறனில் 4,673 மற்றும் மல்டி கோர் செயல்திறனில் 10,912 பெற்றுள்ளது. இந்த இரண்டு முடிவுகளும் ஐபோன் எக்ஸ் போன்ற செயல்திறனை தான் காண்பித்துள்ளன, ஆனால் வரையறைகள் பெரும்பாலும் பயன்பாட்டைப் பொருத்து தான் தீர்மானிக்கப்படுகிறது. இதற்கிடையில் கீக்பெஞ்ச் பட்டியல் மெமரி, க்ரிப்டோ, முகம் மற்றும் பேச்சு கண்டறிதல்கள் போன்றவற்றின் அடிப்படையிலும் சோதனை மதிப்பெண்களை வழங்கியிருக்கிறது.
மேலும் ஆப்பிளிடம் இருந்து இது வரையிலும் 2018 ஐபோன் மாடல்களைப் பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது வெளியீட்டின் முன்னர் கொடுக்கப்படும் தகவல் தான், முழுவதும் உண்மையான தகவல்களாக இருக்க வாய்ப்புகள் குறைவு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்