iPhone 16 Pro, iPhone 16 Pro Max இரண்டு செல்போன் மாடல்களும் Apple நிறுவனத்தின் Its Glowtime விழாவில் வெளியிடப்பட்டது. இவைகள் டாப்-ஆஃப்-லைன் A18 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது iOS 18 மாடலின் ஒரு பகுதியாக இருக்கும். புதிய Apple Intelligence அம்சங்களை கொண்டுள்ளது. இரண்டு போன்களும் மேம்படுத்தப்பட்ட அல்ட்ராவைட் ஆங்கிள் கேமராவுடன் வந்துள்ளன
iPhone 16 Pro 128ஜிபி மெமரி மாடல் விலை தோராயமாக ரூ. 84,000 இருக்கலாம் என தெரிகிறது. அதுவே iPhone 16 Pro Max 256GB மெமரி மாடல் ரூ. 1,00,700 விலையில் இருந்து தொடங்குகிறது. டெசர்ட் டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம், ஒயிட் டைட்டானியம் மற்றும் பிளாக் டைட்டானியம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. 512ஜிபி மெமரி மற்றும் 1டிபி மெமரி மாடல்களும் இருக்கிறது. செப்டம்பர் 13 முதல் iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max செல்போன் வாங்க முன்கூட்டிய ஆர்டர்கள் ஆரம்பம் ஆகிறது. செப்டம்பர் 20 முதல் ஆப்பிள் இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மூலம் மொபைல்களை வாங்க முடியும்.
iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max மாடல் இரண்டும் இரட்டை சிம் ஸ்மார்ட்போன்கள் ஆகும். iOS 18 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகின்றன ஆப்பிளின் இரண்டாம் தலைமுறை 3nm A18 Pro சிப் மூலம் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மாடல்களுடன் ஒப்பிடுகையில் 15 சதவிகிதம் செயல்திறன் அதிகரிப்பை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது. அதே நேரத்தில் 20 சதவிகிதம் குறைவான பேட்டரி சக்தியை பயன்படுத்துகிறது. iOS 18.1 வெளிவரும் போது இரண்டு போன்களும் இறுதியில் அனைத்து Apple Intelligence அம்சங்களையும் பெறும்.
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை முறையே 6.3 இன்ச் மற்றும் 6.9 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களுடன் வருகின்றன. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 2,000நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் ஆப்பிளின் மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஐபோன் 16 ப்ரோ இரண்டு மாடல்களும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. டெலிஃபோட்டோ கேமரா 5x ஆப்டிகல் ஜூம் செயல்திறனை வழங்கும். பெரிஸ்கோப் லென்ஸ் இருக்கிறது. முன்பக்கத்தில் வீடியோ அழைப்புகள் எடுப்பதற்கும் செல்ஃபி எடுப்பதற்கும் 12 மெகாபிக்சல் TrueDepth கேமரா உள்ளது. 4K 120fps வீடியோவை சப்போர்ட் செய்கிறது.
கடந்த ஆண்டு மியூட் சுவிட்சை மாற்றிய அதிரடி பொத்தானுக்கு கூடுதலாக, ஆப்பிள் புதிய ஐபோன் 16 சீரிஸை டச் சென்சிட்டிவ் கேமரா கண்ட்ரோல் பட்டனுடன் பொருத்தியுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. USB 3.0 Type-C போர்ட்டுடன் 5G, 4G LTE, Wi-Fi 6E, புளூடூத், NFC மற்றும் GPS இணைப்புகளை சப்போர்ட் செய்கிறது. ஆப்பிள் வழக்கமாக பேட்டரி திறன்களை வெளியிடாது. இந்த செல்போன் மாடல்களை 27W அல்லது MagSafe வயர்லெஸ் சார்ஜிங் அடாப்டரைப் பயன்படுத்தி 15Wல் சார்ஜ் செய்யலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்