Photo Credit: Totalleecase.com
iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max ஸ்மார்ட்போன்கள் இன்னும் சில நாட்களில் அறிமுகமாகவுள்ளது. இன்னிலையில், இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பை வெளியிடும் வகையில், டம்மி iPhone 11 ஸ்மார்ட்போன்கள் பற்றிய வீடியோ யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அமைப்புகளுக்கு ஏற்றவாறு, இந்த ஸ்மார்ட்போன்களுக்கான மொபைல் கவர்கள் மொபைல் கவர்களை விற்பனை செய்யும் தளங்களில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, மற்றொரு அறிக்கை தகவல், ஆப்பிள் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான தயாரிப்பு செலுவுகளை குறைத்துவிட்டது என்று குறிப்பிடுகிறது.
iPhone 11 மற்றும் iPhone 11 Pro ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாவதற்கு முன்பே ConceptsiPhone என்ற யூடியூப் பக்கம் இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை போலவே காட்சியளிக்கும் இரண்டு டம்மி மொபைல்கள் இடம்பெற்றிருந்தன. அந்த மாதிரிகளில் முன்புறத்தில் வைட்-நாட்ச், மெடல் ப்ரேம், பின்புறத்தில் கிளாஸ், எப்போதும் போல நடுவில் ஆப்பிள் லோகோ ஆகியவை காணப்பட்டது. கேமராக்களை பொருத்தவரை iPhone 11 இரண்டு பின்புற கேமராக்களை கொண்டிருந்தது. அதே நேரத்தில், iPhone 11 Pro மூன்று பின்புற கேமராக்களை கொண்டு காட்சியளித்தது.
ConceptsiPhone வெளியிட்ட அந்த வீடியோவை கீழே காணலாம்.
மேலும், Totalleecase.com என்ற தளத்தில் iPhone 11, iPhone 11 Pro, மற்றும் iPhone 11 Pro Max என மூன்று ஸ்மார்ட்போன்களுக்குமான மொபைல் கவர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது, அதுவும் இந்த ஸ்மார்ட்போன்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகததற்கு முன்பே இந்த கவர்கள் விற்பனையில் வைத்துள்ளது. அந்த மொபைல் கவர்களில் காணப்படும் வடிவமைப்பும், இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் வடிவமைப்பும் ஒன்றுபோலவே அமைந்துள்ளது. அந்த தளத்தில் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள், இந்த ஸ்மார்ட்போன்கள் வெள்ளை நிறத்தில் அறிமுகமாகலாம் என்பதை குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் இந்த வீடியோ, இந்த ஸ்மார்ட்போன்கள் ரோஸ் கோல்ட் வண்ணத்தில் வெளியாகலாம் என்று குறிப்பிடுகிறது.
AppleInsider தளத்தில் வெளியாகியுள்ள ஜே.பி. மோர்கன் முதலீட்டாளர் குறிப்பு, ஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்தில் தன் உற்பத்தி விலையை குறைத்துள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 2019ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஆப்பிள் ஐபோன் ஸ்மார்ட்போன்களின் விலையும் 30 டாலர்களில் இருந்து 50 டாலர்கள் விலை குறைவாக கிடைக்கப்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்