iPhone 11, iPhone 11 Pro, and iPhone 11 Pro Max ஆகியவற்றிற்கான புதிய Smart Battery Case-களை Apple அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய case-கள் போனைத் திறக்காமல் கேமரா செயலியை விரைவாகத் தொடங்க பிரத்யேக பொத்தானைக் கொண்டுள்ளன. case முழுமையாக சார்ஜில் இருக்கும்போது, பயனர்கள் '50 சதவீதம் நீண்ட பேட்டரி ஆயுள் 'பெறுவார்கள் என்று ஆப்பிள் கூறுகிறது. புதிய ஸ்மார்ட் பேட்டரி cases பல்வேறு வண்ண விருப்பங்களில் வருவதோடு, இப்போது அமெரிக்காவில் கிடைக்கிறது. மற்ற அம்சங்களில், வயர்லெஸ் முறையில் case-ஐ சார்ஜ் செய்வதற்கான Qi நிலையான பொருந்தக்கூடிய தன்மை அடங்கும்.
புதிய iPhone 11, iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max Smart Battery Case-கள் ஒவ்வொன்றும் $ 129 (சுமார் ரூ .9,200)-யாக விலையிடப்படுள்ளது. case-கள் Black, White மற்றும் Pink Sand ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகின்றன. அவை ஏற்கனவே அமெரிக்க இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கின்றன. மேலும், shipping ஒரு நாளுக்கு குறைவாகவே இருக்கும்.
case வடிவமைப்பை விரிவாகக் கூறுகையில், “உள்ளே, மென்மையான மைக்ரோ ஃபைபர் லைனிங் (microfibre lining) உங்கள் ஐபோனைப் பாதுகாக்க உதவுகிறது. வெளிப்புறத்தில், silicone exterior, silky, soft-touch finish உங்கள் கையில் நன்றாக இருக்கிறது. மென்மையான எலாஸ்டோமர் (soft elastomer) hinge வடிவமைப்பு case-ஐ வைத்து அதை கழற்றுவதை எளிதாக்குகிறது. ”iPhone 11, iPhone 11 Pro, and iPhone 11 Pro Max ஆகியவற்றிற்கான Smart Battery Case-களில் புதிய அர்ப்பணிப்பு கேமரா பொத்தான் (camera button) அதே பக்கத்தில், கீழே பவர் பொத்தான் (power button) அமர்ந்திருக்கிறது. அதை அழுத்தினால், போன் பூட்டப்பட்டிருந்தாலும் அல்லது திறக்கப்பட்டிருந்தாலும் கேமரா செயலியைத் தொடங்கும். பொத்தானை விரைவாக அழுத்தினால் புகைப்படம் எடுக்கும். மேலும், நீண்ட நேரம் அழுத்தினால் QuickTake வீடியோவைப் பிடிக்கும்.
ஆப்பிளின் புதிய Smart Battery Case-கள் ஐபோன் lock screen-னிலும், notification center-ரிலும் பேட்டரி நிலையை காண்பிக்கும். ஆப்பிள் குறிப்பிட்டுள்ளபடி, வயர்லெஸ் சார்ஜிங்கை இயக்குவதற்கான Qi-சான்றளிக்கப்பட்ட சார்ஜர்களுடன் இது இணக்கமானது. இதன் பொருள் உங்கள் ஐபோன் மற்றும் சார்ஜரை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யலாம். இது USB-PD சார்ஜர்களுடனும் இணக்கமானது. மேலும், Lightning Connector உடன் EarPods அல்லது Lightning Digital AV Adapter போன்ற Lightning பாகங்களை ஆதரிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்