இந்தியாவில் ஐ-போன் 11 64ஜிபி மாடலின் விலை ரூ.64,900ல் தொடங்கி ரூ.79,000 வரை உள்ளது.
Photo Credit: Justin Sullivan / Getty Images North America / AFP
ஐ-போன் 11 ப்ரோ மேக்ஸில் பின்புறம் மூன்று கேமரா அமைப்புகளை கொண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் இன்று துவங்கியது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களான ஃப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளலாம்.
மேலும், சில்லறை விற்பனை கடைகளிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என இந்திய விநியோகஸ்தர் இங்க்ராம் மைக்ரோ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ-போன் 11 64ஜிபி மாடலின் விலை ரூ.64,900ல் தொடங்குகிறது. மேலும், இது 128ஜிபி மற்றும் 256ஜிபி வேரியன்டில் ரூ.69,000 முதல் 79,000 வரையிலான விலையில் கிடைக்கிறது. ஐபோன் 11 ப்ரோ 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.99.000ல் இருந்து தொடங்குகிறது. 256ஜிபி வேரியண்ட் ரூ.1,13,900க்கும், 512ஜிபி வேரியண்ட்க்கு ரூ.1,31,900க்கும் கிடைக்கிறது.
ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 64ஜிபி வேரியண்ட் ரூ.1,09,000ல் இருந்து தொடங்குகிறது. 256ஜிபி மற்றும் 512ஜிபி வேரியண்டின் விலை ரூ.1,23,000 மற்றும் 1,41,000க்கு கிடைக்கிறது.
இந்த ஐபோன் சீரிஸ் விற்பனையில் எச்டிஃஎப்சி வங்கி கார்டுகள் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.6000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.7,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், எச்டிஃப்சி வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் ஆஃபர்களும் அறிவித்துள்ளது.
iPhone 11: Amazon, Flipkart, Paytm Mall
iPhone 11 Pro: Amazon, Flipkart, Paytm Mall
iPhone 11 Pro Max: Amazon, Flipkart, Paytm Mall
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட iOS 13 இயக்க அமைப்பை கொண்டு செயல்படும் இந்த iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max ஸ்மார்ட்போன்கள் ஹேப்டிக் டச் வசதியுடன் முறையே 5.8-இன்ச் மற்றும் 6.5-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரைகளை கொண்டுள்ளது.
கடினமான மேட் கிளாஸ் மற்றும் ஸ்டெய்ன்லெஸ்-ஸ்டீல் வடிவமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4மீ தூரம் வரை 30 நிமிடங்களுக்கு நீர் எதிர்ப்பு (water-resistance) திறனை கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் மூன்றாவது தலைமுறை நியூரல் இஞ்சினுடன் கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் புதிய A13 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது
Disclosure: Paytm's parent company One97 is an investor in Gadgets 360.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset