iPhone 11: 2 பின்புற கேமரா, A13 பயோனிக் சிப்புடன் அறிமுகம்!

iPhone 11 இந்தியாவில் 64,900 ரூபாய் என்ற துவக்கவிலையில் அறிமுகமாகியுள்ளது. 64GB, 128GB மற்றும் 256GB என மூன்று வகைகளில் அறிமுகம்.

iPhone 11: 2 பின்புற கேமரா, A13 பயோனிக் சிப்புடன் அறிமுகம்!

iPhone 11 ஸ்மார்ட்போன் ஆறு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது - ஊதா, வெள்ளை, பச்சை, மஞ்சள், கருப்பு), மற்றும் சிவப்பு.

ஹைலைட்ஸ்
  • iPhone 11-ல் புதிய A13 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது
  • iPhone 11-ல் இரண்டு 12 மெகாபிக்சல் பின்புற கேமராக்கள்
  • முன்புறத்திலும் 12 மெகாபிக்சல் செல்பி கேமரா
விளம்பரம்

iPhone 11: ஆப்பிள் நிறுவனம் iPhone XR ஸ்மார்ட்போனின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனான iPhone 11-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 2018 ஐபோன் வரிசையில் சிறந்த விற்பனையை பெற்ற ஸ்மார்ட்போனாக iPhone XR இருந்தது. அந்த வரிசையில் இந்த நிலையை மேம்படுத்த iPhone 11 ஸ்மார்ட்போன் மூலம், புதிய குறைந்த விலை இபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. iPhone 11 மட்டுமில்லாமல், இதனுடன் இன்னும் இரண்டு ஸ்மார்ட்போன்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max என்ற பெயர்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் நிறுவனத்தின் டாப்-எண்ட் வரிசையில் முன்னிலை இடத்தை பெற்றுள்ளது.

iPhone 11: இந்திய விலை!

iPhone 11 இந்தியாவில் 64,900 ரூபாய் என்ற துவக்கவிலையில் அறிமுகமாகியுள்ளது. 64GB சேமிப்பு கொண்ட இந்த அடிப்படை வகை அமெரிக்காவில் 699 டாலர்கள் (சுமார் 50,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 128GB மற்றும் 256GB என மேலும் இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போன்கள் 749 டாலர்கள் (சுமார் 53,600 ரூபாய்) மற்றும் 849 டாலர்கள் (சுமார் 60,800 ரூபாய்) என்ற விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

iPhone 11 ஸ்மார்ட்போன் ஆறு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது -  ஊதா (Purple), வெள்ளை (White), பச்சை (Green), மஞ்சள் (Yellow), கருப்பு (Black), மற்றும் சிவப்பு (Red)

இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு அமெரிக்கா உட்பட 30 நாடுகளில் செப்டம்பர் 13 ஆம் தேதி துவங்கவுள்ளது. மேலும் இந்த நாடுகளில் முதல் பகுதி விற்பனை செப்டம்பர் 20 அன்று துவங்குகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 27 அன்று துவங்குகிறது. 

iPhone 11: சிறப்பம்சங்கள்!

iPhone 11 ஸ்மார்ட்போன் 6.1-இன்ச் அளவிலான லிக்விட் ரெடினா திரையை (Liquid Retina display) கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய A13 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத அளவு 'வேகமான CPU' மற்றும் 'வேகமான GPU' ஆகியவற்றை ஐபோன் 11-நிற்கு இந்த A13 பயோனிக் சிப் வழங்கவுள்ளது என ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. iOS 13 மூலம் இயங்கும் ஆப்பிள் ஐபோன் 11 டார்க் மொட், விரிவாக்கப்பட்ட ஹாப்டிக் டச் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

iPhone XR-உடன் ஒப்பிடுகையில் சிறந்த மேம்பாடாக கருதப்படுவது iPhone 11-ன் கேமராக்கள். iPhone 11 ஸ்மார்ட்போன் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. f/1.8 துளை (aperture) கொண்ட 12 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் f/2.4 துளை கொண்ட 120-டிகிரி ஆங்கிள் வரை விரிந்த புகைப்படங்களை எடுக்கும் தன்மை கொண்ட 12 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா. இந்த புதிய கேமரா மென்பொருள் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் HDR, மேம்படுத்தப்பட்ட நைட் மோட் மற்றும் மேம்படுத்தப்பட்ட போர்ட்ரைட் மோட் ஆகியவற்றை கொண்டுள்ளது. கூடுதலாக இந்த இரண்டு கேமராக்களும் 60fps திரை விகிதத்துடன் 4K வீடியோ எடுக்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் iPhone XR ஸ்மார்ட்போனை விட 36 சதவிகிதம் அதிக ஒளிர்வு கொண்ட ப்ளாஷை கொண்டுள்ளது.

முன்புற கேமராக்களிலும், iPhone 11 ஸ்மார்ட்போன் iPhone XR-ஐ விட ஒருபடி மேலாகவே உள்ளது. 12 மெகாபிக்சல் அளவிலான இந்த கேமரா, 4K வீடியோ எடுக்கும் வசதியுடன் ஸ்லோ-மோஷன் (slo-mo) வீடியோக்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது.

பேட்டரியை பொருத்தவரையிலும், iPhone XR-ஐ விட ஒரு மணி நேரம் அதிகம் நீடிக்கும் பேட்டரி ஆயுளை iPhone 11 கொண்டுள்ளது. iPhone XR HD வீடியோ லூப் தேர்வில் 13 மணி நேரம் நீடித்த பேட்டரியை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Best-in-class performance
  • Excellent battery life
  • Great cameras
  • Night Mode is a welcome addition
  • iOS offers regular, timely updates
  • Bad
  • Low-resolution display
  • Slow bundled charger
  • No PiP or other software features that utilise the big screen
Display 6.10-inch
Processor Apple A13 Bionic
Front Camera 12-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3110mAh
OS iOS 13
Resolution 828x1792 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  2. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  3. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  4. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  5. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  6. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
  7. Lava Blaze Dragon: ₹10,000-க்குள் இந்தியாவில் லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC உடன் ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமானது Samsung Galaxy F36 5G: Circle to Search, Gemini Live - வாங்கலாமா? முழு விவரம்!
  9. இந்தியாவில் Vivo V60 லான்ச் தேதி லீக்! முதல் முறையாக OriginOS - முழு அம்சங்கள், எதிர்பார்ப்புகள்!
  10. அறிமுகமாகிறது Lava Agni 4: புதிய டிசைன், 50MP கேமரா - லீக் ஆன சிறப்பம்சங்கள் மற்றும் விலை இதோ!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »