iPad 8வது தலைமுறை மற்றும் புதியவை iPadOS 26 புதுப்பிப்புடன் இணக்கமாக உள்ளன
Photo Credit: Apple
ஆப்பிள் ரசிகர்களே, இது உங்களுக்கான செய்தி! ஆப்பிள் நிறுவனம் தனது மிகப்பெரிய சாஃப்ட்வேர் அப்டேட்களான iOS 26, iPadOS 26 மற்றும் macOS Tahoe ஆகியவற்றை செப்டம்பர் 15, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள தகுதியான சாதனங்களுக்கு இந்த அப்டேட்கள் படிப்படியாக கிடைக்க தொடங்கிவிட்டன. இந்த அப்டேட் ஆப்பிள் வரலாற்றிலேயே ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கு. இது ஒரு வெறும் சாஃப்ட்வேர் அப்டேட் இல்ல, முழுமையான டிசைன் மற்றும் ஏஐ அனுபவத்தை மாற்றியமைக்கும் ஒரு புதுமையான வடிவம்னே சொல்லலாம்.
லிக்விட் கிளாஸ் டிசைன்: இந்த அப்டேட்-ல மிகப்பெரிய மாற்றம் இந்த "லிக்விட் கிளாஸ்" டிசைன்தான். ஐகான்கள், விட்ஜெட்கள் மற்றும் மற்ற UI எலிமென்ட்கள் இப்போது ஒரு புதிய, ஒளிபுகும் (translucent) மற்றும் திரவம் போன்ற தோற்றத்தை பெற்றுள்ளன. ஐஓஎஸ் 7-க்கு பிறகு ஆப்பிள் செய்த ஒரு பெரிய விஷுவல் மாற்றமா இது கருதப்படுது. இது திரையில் உள்ள கன்டென்ட்-க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குது.
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (AI): சமீபத்திய ஆப்பிள் ஏஐ அம்சங்கள் இப்போது இந்த அப்டேட்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. லைவ் டிரான்ஸ்லேஷன் (Live Translation) மூலம் மெசேஜ், ஃபேஸ்டைம் மற்றும் போன் கால்ஸ்-ல் கூட நிகழ்நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்ய முடியும். மேலும், விஷுவல் இன்டெலிஜென்ஸ் (Visual Intelligence) என்ற அம்சம், ஸ்கிரீன்ஷாட்களில் உள்ள தகவல்களை பகுப்பாய்வு செய்து, அதை பற்றி கேள்விகள் கேட்கவும் அல்லது அதனுடன் தொடர்புடைய விஷயங்களை தேடவும் உதவுகிறது. கென்மோஜி (Genmoji) என்ற புதுமையான அம்சத்தையும் ஆப்பிள் கொண்டு வந்திருக்கு.
புதிய போன் ஆப் அம்சங்கள்: அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகளுக்கு, கால் ஸ்கிரீனிங் (Call Screening) என்ற அம்சம், அழைப்பாளரின் பெயர் மற்றும் அழைப்புக்கான காரணம் போன்ற தகவல்களை கேட்டுக்கொள்ளும். மேலும், போன் கால் ஹோல்டில் இருக்கும்போது, ஹோல்ட் அசிஸ்ட் (Hold Assist) என்ற அம்சம், ஒரு லைவ் ஏஜென்ட் வரும்போது உங்களுக்குத் தெரிவிக்கும்.
ஐபோன்: ஐஓஎஸ் 26 அப்டேட் ஐபோன் 11 சீரிஸ் மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களுக்கு கிடைக்கும். ஐபோன் எக்ஸ்எஸ், எக்ஸ்எஸ் மேக்ஸ், மற்றும் எக்ஸ்ஆர் போன்ற பழைய மாடல்கள் இனி இந்த அப்டேட்டைப் பெறாது.
ஐபேட்: ஐபேட்ஓஎஸ் 26 அப்டேட் ஐபேட் 8-ம் தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களுக்கு கிடைக்கும்
மேக்: மேக்ஓஎஸ் டாஹோ, ஆப்பிள் சிலிக்கான் சிப்செட் உள்ள 2020 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களுக்கும், சில பழைய இன்டெல் மேக் மாடல்களுக்கும் கிடைக்கும்.
அப்டேட் செய்வது எப்படி?
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
...மேலும்