Apple நிறுவனம் iPhone-க்காக உருவாக்கிக் கொண்டிருக்கும் 5 புதிய Satellite Features குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன
Photo Credit: Apple
Apple iPhone-க்கு புதிய 5 Satellite Features லீக்: Maps, Messages, 5G NTN
நம்ம எல்லாரும் iPhone-ல இப்போதைக்கு Emergency SOS via Satellite வசதியை மட்டும் தான் பார்த்துட்டு இருக்கோம். அதாவது, சிக்னலே இல்லாத இடத்துல, அவசர உதவிக்கு மட்டும் இந்த Satellite இணைப்பை யூஸ் பண்ண முடியும். ஆனா, Apple நிறுவனம் இதை விட ஒரு அஞ்சு மாஸ்ஸான அம்சங்களை iPhone-க்காக ரெடி பண்ணிட்டு இருக்காங்கனு ஒரு தகவல் லீக் ஆகியிருக்கு.
Bloomberg-ன் மார்க் குர்மன் (Mark Gurman) இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த புது அம்சங்கள் எல்லாம் என்னென்னன்னு பார்க்கலாம் வாங்க
1. Apple Maps via Satellite (சாட்டிலைட் மூலம் மேப்ஸ்): இனிமேல் உங்க iPhone-ல செல்லுலார் அல்லது Wi-Fi கனெக்டிவிட்டி இல்லனாலும், Apple Maps மூலமா Navigation பயன்படுத்த முடியும். சிக்னல் இல்லாத மலைப் பகுதி, காடுனு எங்க இருந்தாலும் வழியைத் தெரிஞ்சுக்கலாம். இதுதான் பெரிய அப்கிரேடா பார்க்கப்படுது.
2. Photos in Messages via Satellite (சாட்டிலைட் மூலம் புகைப்படங்கள்): சிக்னலே இல்லாம நீங்க இருக்கீங்கன்னா, அப்போகூட Messages ஆப் மூலமா Photos அனுப்ப முடியும். இந்த அம்சம் அவசரகால சூழ்நிலையில உங்களுடைய உடைஞ்ச காலை போட்டோ எடுத்து அவசர உதவிக்கு அனுப்புறதுக்கு உதவலாம்னு சொல்லியிருக்காங்க. நார்மல் வெப் பிரவுசிங், வீடியோ கால்ஸ் போன்றவற்றுக்கு இப்போதைக்கு பிளான் இல்லையாம்.
3. Natural Usage (இயல்பான பயன்பாடு): இது ஒரு செம விஷயம்! இப்போ இருக்குற Emergency SOS பயன்படுத்த, தெளிவான வானம் தெரியுற இடத்துல போனை மேல காட்டி யூஸ் பண்ணனும். ஆனா, இந்த Natural Usage அம்சம் வந்தா, வீட்டுக்குள்ள இருந்தோ அல்லது வானம் தெளிவாகத் தெரியாத சூழ்நிலையில இருந்தோகூட Satellite இணைப்பை பயன்படுத்த முடியும்.
4. Satellite over 5G (5G வழியா சாட்டிலைட்): 5G NTN (Non-Terrestrial Networks) ஆதரவை வழங்குறதுக்கு Apple வேலை பார்க்குது. இதனால செல் டவர்கள் Satellite-ஐ யூஸ் பண்ணி, நெட்வொர்க் கவரேஜை அதிகப்படுத்த முடியும். இது எதிர்காலத்துல நெட்வொர்க் இல்லாம இருக்கிற கிராமப்புறங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
5. Satellite API framework for Third-Party Apps (மூன்றாம் தரப்பு செயலிகளுக்கான API): இதை டெவலப்பர்களுக்காக கொண்டு வராங்க. இதன் மூலமா, மற்ற ஆப் டெவலப்பர்கள் விருப்பப்பட்டா, அவங்களுடைய ஆப்ஸ்ல இந்த Satellite கனெக்டிவிட்டியை இன்டக்ரேட் பண்ணிக்க முடியும்.
இப்போ இந்த Satellite Features இலவசமா கிடைக்குது. ஆனா, எதிர்காலத்துல இந்த மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்த Apple, யூஸர்களிடம் கட்டணம் வசூலிக்க வாய்ப்பிருக்குன்னு மார்க் குர்மன் சொல்லியிருக்காரு. இந்த வசதிகளுக்காக Apple, Globalstar-ன் உள்கட்டமைப்புக்கு முதலீடு செஞ்சிருக்கு. ஒருவேளை SpaceX நிறுவனம் Globalstar-ஐ கையகப்படுத்தினா, இந்த அப்கிரேட்ஸ் எல்லாம் இன்னும் வேகமா வரலாம்னு எதிர்பார்க்கப்படுது.
மொத்தத்துல, இந்த Apple Satellite Features எல்லாம் வந்தா, iPhone யூஸர்களுக்கு எமெர்ஜென்சிக்கு அப்பாற்பட்ட முக்கியமான உதவிகள் கிடைக்கும். இந்த 5 புதிய அம்சங்கள்ல உங்களுக்கு எந்த அம்சம் ரொம்ப பிடிச்சிருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்