லேட்டஸ்ட் iOS 26.1 பீட்டா அப்டேட்டில், புதிய Liquid Glass இன்டர்பேஸ் டிசைனில் உள்ள அதிகப்படியான கண்ணாடித்தன்மையை (Transparency) குறைக்க ஒரு ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது
Photo Credit: Apple
ஐபோன் 17 தொடர் iOS 26 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
நம்ம ஆப்பிள் கம்பெனி, செப்டம்பர் மாசம் iOS 26 அப்டேட் ரிலீஸ் பண்ணினது எல்லாருக்கும் தெரியும். அந்த அப்டேட்ல புதுசா Liquid Glassன்னு ஒரு டிசைனை கொண்டு வந்தாங்க. அதாவது, போன்ல இருக்குற மெனுக்கள், நோட்டிஃபிகேஷன் பேனல் எல்லாமே ஒரு கண்ணாடி மாதிரி டிரான்ஸ்பரண்டா (Translucent) தெரியும். பாக்க செம மாடர்னா, வேற லெவல்ல இருந்துச்சு. ஆனா, இந்த லுக் எல்லாருக்கும் பிடிச்சிருந்ததான்னு கேட்டா, இல்லன்னு தான் சொல்லணும்.நிறைய யூசர்கள், குறிப்பா ஐபோன் 17 சீரிஸ் யூஸ் பண்றவங்க, "இந்த அதிகப்படியான டிரான்ஸ்பரன்சி கண்ணுக்கு ரொம்ப சிரமத்தைக் கொடுக்குது. கண்ணு கூசுற மாதிரி இருக்கு, சில நேரத்துல ஒரு மாதிரி குழப்பமான லுக் கொடுக்குது"ன்னு ஆப்பிள்கிட்ட தொடர்ந்து ஃபீட்பேக் சொல்லிட்டு வந்தாங்க. iOS 26 அப்டேட் வந்ததில் இருந்து இந்தக் குறைபாட்டை நிறைய பேர் சொன்னாங்க. சில பேருக்கு கண் எரிச்சல் (Eye Strain) வந்ததாகவும் கூட புகார் வந்துச்சு.
யூசர்களோட இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமா, ஆப்பிள் இப்போ லேட்டஸ்ட்டா ஒரு அப்டேட்டைக் கொண்டு வந்திருக்கு. அதுதான் iOS 26.1 Beta 4. இந்த பீட்டா 4 அப்டேட்ல, Liquid Glass டிசைன்ல இருக்குற அந்த 'கண்ணாடித்தன்மையை' (Transparency) நம்ம விருப்பப்படி அட்ஜஸ்ட் பண்ணிக்கிற ஒரு புது ஆப்ஷனை ஆப்பிள் கொடுத்திருக்கு. இது ஐபோன் யூசர்களுக்கு நிஜமாவே ஒரு பெரிய ரிலீஃப் தான்!
இந்த சூப்பரான செட்டிங், ரொம்ப சிம்பிளா நம்ம Settings ஆப் குள்ளயே இருக்கு. நீங்க செட்டிங்ஸ் (Settings) ஓபன் பண்ணி, அதுக்குள்ள இருக்கிற Display & Brightness ஆப்ஷனுக்குள்ள போகணும். அங்க, புதுசா Liquid Glassன்னு ஒரு மெனு இருக்கும். அதை ஓபன் பண்ணினா, உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் காட்டும்:
நாம ஒரு ஆப்ஷனை செலக்ட் பண்ணும்போதே, ஸ்கிரீன்ல அதோட ப்ரிவியூவும் காட்டும்னு ஆப்பிள் சொல்லியிருக்காங்க. இதனால, நமக்கு எது சௌகரியமா இருக்கோ, அதை உடனே மாத்திக்கலாம்.
இந்த அப்டேட், ஐபோன்ல மட்டுமில்லாம, iPadOS 26.1 மற்றும் macOS 26.1 பீட்டா வெர்ஷன்களிலேயும் வந்திருக்கு. ஆப்பிள் இப்போ டெஸ்ட்டிங்ல இருக்கிற இந்த 26.1 அப்டேட்டை, அடுத்த மாசம் (அக்டோபர் அல்லது நவம்பர் ஆரம்பத்துல) எல்லா யூசர்களுக்கும் பொதுவா ரிலீஸ் பண்ண வாய்ப்பு இருக்கு.
மொத்தத்துல, யூசர்களோட குறைகளை கேட்டு, அதுக்கு ஏத்த மாதிரி உடனே ஒரு அப்டேட்டை கொண்டு வந்த ஆப்பிளோட இந்த முயற்சி, கண்டிப்பா பாராட்ட வேண்டிய விஷயம் தான். உங்க கண்ணுக்கு எது சௌகரியமோ, இனி நீங்களே உங்க ஐபோன் லுக்-ஐ மாத்திக்கலாம். அப்டேட் வந்ததும் மறக்காம செட்டிங்கை மாத்திப் பாருங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak