நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது iOS 18 Update பற்றி தான்.
ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய iOS 18 Update வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. பெரும்பாலும் அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்துகிறது மற்றும் கடந்த பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு வழங்கி வரும் அம்சங்களை ஐபோன்களுக்கு கொண்டுவருகிறது. ஐபோனுக்கான புதிய அப்டேட் முதன்முதலில் ஜூன் மாதம் நடைபெற்ற உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் WWDC 2024 வெளியிடப்பட்டது.
அடுத்தடுத்த வாரங்களில் பல டெவலப்பர்கள் மற்றும் பொது பீட்டா பயனாளர்களுக்கு கிடைத்தது. இப்போது உலகம் முழுக்க எல்லா ஐபோன் பயனாளர்களுக்கும் கிடைக்கிறது. இப்போது இந்தியாவில் உள்ள iPhone பயனர்களுக்குப் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. ஹோம் மற்றும் லாக் ஸ்கிரீன்களை மாற்ற புதிய வழிகள், புதுப்பிக்கப்பட்ட பயன்பாடுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கணினி அளவிலான மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) தொகுப்பான Apple Intelligence மூலம் ஐபோன் மாடல்கள் இனி இயங்கும்.
இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு ஐஓஎஸ் 18 அப்டேட் கிடைத்ததும், அது உங்கள் ஸ்க்ரீனில் ஒரு பாப்-அப் மெசேஜ் ஆக தோன்றும். அதன் பிறகு கீழ்வரும் வழிமுறைகளை அப்படியே பின்பற்றவும்.
அதன் பிறகு உங்கள் ஐபோன் Restart செய்யப்பட்டு ஐஓஎஸ் வெர்ஷனுக்கு அப்கிரேட் ஆகியிருக்கும்.
iOS 18 டெவலப்பர் மற்றும் பொது பீட்டா அப்டேட் பெற்ற அனைத்து ஐபோன் மாடல்களும் iOS 18 பெற தகுதியானவை என்று Apple கூறுகிறது. இதில் ஆப்பிளின் சமீபத்திய மாடல்களான iPhone 15 Pro Max மற்றும் iPhone XR போன்ற பழைய மாடல்களும் அடங்கும் . செப்டம்பர் 20 ஆம் தேதி விற்பனைக்கு வரும் iPhone 16 சீரிஸ், புதிய iOS 18 அப்டேட் அவுட்-ஆஃப்-பாக்ஸுடன் வரும் .
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்