நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Infinix Zero Flip செல்போன் பற்றி தான்.
Infinix நிறுவனம் Zero Flip செல்போனை இந்தியாவில் முதல் clamshell-styleலில் மடிக்கக்கூடிய போனாக அறிமுகப்படுத்தியது. இதில் 6.9 இன்ச் LTPO AMOLED உள் திரை மற்றும் 3.64 இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே உள்ளது. இது MediaTek Dimensity 8020 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 16GB வரை ரேம் உடன் வருகிறது. Infinix Zero Flip செல்போனில் இரண்டு 50 மெகாபிக்சல் வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது Android 14 மூலம் இயங்குகிறது. இரண்டு ஆண்ட்ராய்டு OS அப்டேட் மற்றும் மூன்று வருட பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் Infinix Zero Flip விலை 8 ஜிபி ரேம் 512 ஜிபி மெமரி 49,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இது ப்ளாசம் க்ளோ மற்றும் ராக் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்தியாவில் அக்டோபர் 24 முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும். வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 5,000 தள்ளுபடி பெறலாம். பிளிப்கார்ட் இணையதளத்தில் இருந்து Infinix Zero Flip வாங்கும் போது அறிமுக சலுகையாக ரூ. 44,999 விலையில் கிடைக்கும்.
Infinix Zero Flip செல்போனில் டூயல் சிம் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது. அதில் XOS 14.5 ஸ்கின் மேலே உள்ளது. 6.9-இன்ச் முழு-HD+ LTPO AMOLED உள் பக்க திரை உள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 360Hz டச் ஸ்பீட் கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் டச் ஸ்பீட் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் 3.64-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே இருக்கிறது. இதுவும் 120Hz புதுப்பிப்பு வேகம் கொண்டது.
Infinix ஆனது Zero Flip ஐ MediaTek Dimensity 8200 சிப்செட்டுடன் வருகிறது. 8GB LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 512GB UFS 3.1 மெமரியை கொண்டுள்ளது. மெமரி கார்டு கொண்டு இதன் மெமரியை விரிவாக்க முடியாது.
வெளிப்புறத் திரையில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா இருக்கிறது. இது 4K/30fps வீடியோ பதிவை சப்போர்ட் செய்கிறது. உட்புறத்தில் 4K/60fps வீடியோவைப் பதிவுசெய்யக்கூடிய 50-மெகாபிக்சல் கேமரா உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்