இன்ஃபினிக்ஸ் நோட் 7 மற்றும் இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இன்ஃபினிக்ஸ் நோட் 7, வட்ட வடிவ குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது
இன்ஃபினிக்ஸ் நோட் 7 மற்றும் இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட் ஆகியவை வெளியீட்டுக்கு முன்பே இன்ஃபினிக்ஸ் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இரண்டு புதிய போன்களும் ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே டிசைனுடன் வருகிறது. இந்த போன்கள் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. ஸ்மார்ட்போன்கள் பல கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
Infinix Note 7 மற்றும் Infinix Note 7 Lite விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இன்ஃபினிக்ஸ் நோட் 7, டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, எக்ஸ்ஓஎஸ் 6.0 உடன் Android 10-ல் இயக்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.95 இன்ச் எச்டி + (720x1,640 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளே உள்ளது. இந்த போன், 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு, ஆக்டா கோர் MediaTek Helio G70 SoC-யால் இயக்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனில் வட்ட வடிவ குவாட் ரியர் கேமரா அமைப்பும் உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் மூன்றாம் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்காக, முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
இன்ஃபினிக்ஸ் நோட் 7-ல் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (2 டிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். மற்ற போன்களை போலவே அதே இணைப்புவிருப்பங்கள், சென்சார்களைக் கொண்டுள்ளது. இன்பினிக்ஸ் நோட் 7-ல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.
இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட்டில் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட் உள்ளது. இது, எக்ஸ்ஓஎஸ் 6.0 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இந்த போன் 6.6 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன், 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு MediaTek Helio P22 SoC-யால் இயக்கப்படுகிறது. ![]()
போனின் குவாட் ரியர் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் ஒரு QVGA குவாட்டர்னரி சென்சார் ஆகியவை உள்ளன. போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.
இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட்டில் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். மற்ற போன்களை போலவே அதே இணைப்புவிருப்பங்கள், சென்சார்களைக் கொண்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட், 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் ஒரே சார்ஜில் 35 நாட்கள் நீடிக்கும்.
OnePlus 8 leaks look exciting but when will the phones launch in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Sony Said to Be Planning State of Play Broadcast for Next Week
Oppo Find X9 Pro With Dimensity 9500 SoC Scores 4 Million Points on AnTuTu; Spotted on Geekbench