Huawei Y9s-ல் 4,000mAh பேட்டரி உள்ளது
Huawei Y9s-ல் 48-megapixel பிரதான கேமரா உள்ளது
Huawei Y9s ஆனது Honor 9X-ன் உலகளாவிய மாறுபாடாக விரைவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தொலைபேசி உலகளாவிய தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. தொலைபேசியின் வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் முழு விவரக்குறிப்புகள் ஆகியவற்றை வலைத்தளம் வெளிப்படுத்துகிறது. ஆனால், அதன் வெளியீட்டு தேதி இன்னும் மர்மமாகவே உள்ளது. Huawei Y9 (2019)-ன் தொடர்ச்சியாக Huawei Y9s இருக்கும். மேலும், pop-up செல்ஃபி கேமரா, பின்புறத்தில் triple rear கேமரா அமைப்பு, மற்றும் side-fingerprint scanner ஆகியவற்றுடன் வருகிறது.
Huawei தனது உலகளாவிய தளத்தில் Huawei Y9s பட்டியலை வெளியிட்டுள்ளது. முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில், இந்த போன் Honor 9X போல தோற்றமளித்தது. ஆனால், Huawei Y9s, வேறுபட்ட பிராசசர், கேமரா, மற்றும் பிற நிமிட வேறுபாடுகள் ஆகியவை உள்ளன. Huawei Y9s, Android 9 Pie அடைப்படையிலான EMUI 9.1-ல் இயங்குகிறது. மேலும், 6.59-inch full-HD+ (1080x2340 pixels) TFT LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 6GB RAM உடன் இணைக்கப்பட்டு, Huawei Kirin 710F octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. இண்டர்னல் ஸ்டோரேஜ் 128GB என்று பட்டியலிடப்படுள்ளது. microSD card (512GB) பயன்படுத்தி மேலும் விரிவாக்க விருப்பத்தைப் பெற முடியும்.
Huawei Y9s-ல் f/1.8 aperture உடன் 48-megapixel camera, f/2.4 aperture உடன் 8-megapixel ultra-wide angle lens மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel tertiary lens ஆகிய மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் f/2.2 aperture உடன் 16-megapixel செல்ஃபி கேமரா உள்ளது.
Huawei Y9s-ல் 4,000mAh பேட்டரி உள்ளது. மேலும், 40 மணிநேர தொடர்ச்சியான அழைப்பு, 80 மணி நேரம் மியூசிக் பிளேபேக் மற்றும் 9 மணி நேரம் வீடியோ பிளேபேக் ஆகியவை அடங்கும். இணைப்பு விருப்பங்களில் Bluetooth 4.2, Wi-Fi 802.11 b/g/n, USB Type-C port, GPS/ A-GPS, Glonass மற்றும் பல உள்ளன. ஆன்போர்டு சென்சார்களில் ambient light sensor, gyroscope, compass, gravity sensor, மற்றும் side fingerprint sensor ஆகியவை அடங்கும். Huawei Y9s, Breathing Crystal மற்றும் Midnight Black ஆகிய இரண்டு வண்ணக்களில் வருகிறது. இந்த போன் 163.1x77.2x8.8mm மற்றும் 206 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
குறிப்பிட்டுள்ளபடி, Huawei Y9s வெளியீட்டு தேதியில் எந்த தகவலும் இல்லை. சமீபத்திய கசிவு, PKR 34,999 (சுமார் ரூ. 15,900) விலையுடன் இந்த தொலைபேசி விரைவில் பாகிஸ்தானில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999