இந்தியாவில் அறிமுகமாகிறது ஹூவாய் y9! அமேசானில் முன்பதிவு தொடக்கம்! - விவரம்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் அறிமுகமாகிறது ஹூவாய் y9! அமேசானில் முன்பதிவு தொடக்கம்! - விவரம்

கடந்த அக்டோபர் மாதம் ஹூவாய் y9 குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கின. எனினும் அந்த போனின் விலை மற்றும் வெளியிட்டு விவரம் குறித்த எந்த தகவலும் இதுவரை வரவில்லை. இதைதொடர்ந்து இரண்டு மாதம் கழித்து, அமேசான் இந்தியா இதன் வெளியிட்டை உறுதி செய்தது.

இ-காமர்ஸ் ஜெயிண்ட் என அழைக்கப்படும் அமேசான், இந்த போனுக்காக முன்பதிவை அறிவித்துள்ளது. அதன்படி, இணையத்தில் 'நோட்டிஃபை மீ' பட்டனை அழுத்தும் வகையில் மாற்றியமைத்துள்ளது.

இதன் சிறப்பம்சம் என்னவெனில், ஹூவாய் y9 ஸ்மார்ட்போனானது, 6.5 இன்ச் நாட்ச் டிஸ்பிளே, பின்பக்கம் டூயல் கேமரா, கிரிண் 710soC, 4,000mAh பேட்டரி கொண்டுள்ளது. ஜிபியூ டர்போ, கைரேகை சென்சார் 4.0 டெக்னாலஜியும் உள்ளது.

ஹூவாய் y9 (2019) விலை, டிசைன், வெளியிடு,

ஹூவாய் y9 (2019) ஸ்மார்ட்போனின் இந்திய விலையானது இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த போன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பட்டியலில் இடம்பிடிக்கும் என தெரிகிறது. இதன் வெளியிட்டு விவரமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த போனிற்கான முன்பதிவு மட்டும் அமேசான் இந்தியா வலைதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில், டிஸ்பிளே நாட்ச், முன்பக்கம் 2 கேமரா சென்சார் மற்றும் பின்பக்கம் டூயல் கேமரா சென்சார் கொண்டுள்ளது. இதில் டிஸ்பிளேவில் பெசல் இல்லை என்பது தெரிகிறது.

ஹூவாய் y9 (2019) சிறப்பம்சங்கள்,

டூயல் சிம் ஹூவாய் y9 (2019) ஸ்மார்ட்போனானது, EMUI 8.2 ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோவில் இயங்குகிறது. இதன் 6.5 இன்ச் டிஸ்பிளே (1080x2340 பிக்செல்ஸ்) புல்வீயூ டிஸ்பிளே உடன் 3D டிஸைசன், 19.5:9 அக்ஸப்ட் ரேஸியோ கொண்டுள்ளது. இதில், கிரின் 710 பிராசஸர், எ.ஐ பவர் 7.0 3ஜிபி ரேம் + 64ஜிபி நினைவகம், 4ஜிபி ரேம் + 64 ஜிபி நினைவகம் கொண்டது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் டூயல் கேமரா உடன் 13 மெகா பிக்ஸெல்ஸ் சென்சாருடன் f/1.8 அப்பர்சர் மற்றும் 2 மெகா பிக்செல் சென்சார் f/2.4 அப்பர்சர் கொண்டுள்ளது. இதன் பின்பக்கம் எல்இடி பிளாஷ், எச்டிஆர் கொண்டுள்ளது. முன்பக்கம், டூயல் கேமராவில் 16 மெகா பிக்செல்ஸ் சென்சார் f/1.0 அப்பர்சர் மற்றும் 2 மெகா பிக்செல்ஸ் f/2.4 அப்பர்சர் கொண்டுள்ளது.

ஹூவாய் y9 (2019) ஸ்மார்ட்போனானது, கைரேகை 4.0 டெக்னாலஜி கொண்டுள்ளது. இதன் மூலம் 0.3 செகண்ட்ஸில் அன்லாக் செய்யலாம். இந்த அப்கிரேடட் கைரேகை சென்சார் டெக்னாலஜி மூலம் கைரேகை நேவிகேஷன் கொண்டுள்ளது. 4,000mAh பேட்டரி மற்றும் ப்ளூடூத், மைக்ரோ யூஎஸ்பி கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
  2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
  3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
  4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
  5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
  6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
  7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
  8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
  9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
  10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com