மார்ச் 26 அன்று நடைபெறும் ஒரு நிகழ்வில் Huawei P40 சீரிஸ் வெளியிடப்பட உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஸ்பெயினில் Huawei P40 Lite-ஐ அறிமுகப்படுத்தியுள்ளார். இருப்பினும், Huawei P40 Lite என்பது பெயரில் மட்டுமே ஒரு புதிய போன், ஏனெனில் இது வெளிப்படையாக Huawei Nova 6 SE-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும், இது டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Huawei P40 Lite-ன் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டுக்கு EUR 299 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,378) என்று கூறப்படுகிறது, ஆனால் 8 ஜிபி ரேம் பேக்கிங் செய்யும் அதிக சக்திவாய்ந்த மாடலில் எந்த வார்த்தையும் இல்லை. இந்த போன் Midnight Black, Sakura Pink மற்றும் Crush Green கலர் ஆப்ஷன்களில் வருகிறது, இது மார்ச் 2 முதல் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு இருக்கும். இருப்பினும், இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளுக்கு எப்போது இந்த போனை வழங்கும் என்பது எந்த வார்த்தையும் இல்லை.
Psss...¿te has enterado?
— Huawei Mobile España (@HuaweiMobileESP) February 26, 2020
Con HUAWEI P40 lite mira todo lo que te llevas:
???? Cuádruple cámara IA con campo de visión de 120º
⚙️ Chipset Kirin 810
???? Batería de 4.200 mAh
⚡️ Supercharge: carga al 70% en solo 30 mins
¡Contigo el futuro empieza hoy! pic.twitter.com/lr4J1jds9r
Huawei P40 Lite, டூயல்-சிம் போனாகும், மேலும், EMUI உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இருப்பினும், இந்த மென்பொருள் ஹவாய் மொபைல் சர்வீசஸ் (HMS) மையத்தைச் சுற்றியே கட்டப்பட்டுள்ளது, கூகுள் மொபைல் சர்வீசஸ் (GMS) கோர் அல்ல, அதாவது அத்தியாவசிய கூகுள் சேவைகளான பிளே ஸ்டோர், ஜிமெயில் மற்றும் வரைபடங்கள் போன்றவற்றை அணுக முடியாது. புதிய ஹவாய் போன் 6.4 அங்குல முழு எச்டி + (1080 x 2310 பிக்சல்கள்) டிஸ்பிளேவை மேல்-இடது மூலையில் hole-punch-ல் கொண்டுள்ளது. இது, 8 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டு, ஆக்டா கோர் கிரின் 810 SoC-யால் இயக்கப்படுகிறது.
Huawei P40 Lite, குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அகல-கோண லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. hole-punch-ல் வைக்கப்பட்டுள்ள 24 மெகாபிக்சல் முன் கேமரா மூலம் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளை செய்யலாம்.
போனில் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மேலும் விரிவாக்கம் செய்யலாம். Huawei P40 Lite 3.5 headphone jack-ஐ தக்க வைத்துக் கொண்டுள்ளது மற்றும் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இது 4,200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது, இது 40W சூப்பர்சார்ஜ் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் 4G, Bluetooth, GPS மற்றும் NFC ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் USB Type-C port, சார்ஜ் மற்றும் file transfer-க்கு உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்