Huawei P40 Lite E ஒரு மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
Huawei P40 Lite E, Black மற்றும் Aurora Blue கலர் ஆப்ஷன்களில் வருகிறது
ஹவாய் பி 40 சீரிஸின் சமீபத்திய போனான Huawei P40 Lite E அறிமுகமாகியுள்ளது. போனின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு மற்றும் செல்ஃபி ஷூட்டருக்கான ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு உள்ளது.
போலந்தில் Huawei P40 Lite E-யின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டின் விலை PLN 699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,300) ஆகும். இது ஒரே ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் வருகிறது. ஆஸ்திரியா மற்றும் ருமேனியா வலைத்தள பட்டியல்களில் விலை குறிச்சொற்கள் இடம்பெறவில்லை. தற்போதைய நிலவரப்படி, Huawei P40 Lite E ஐரோப்பாவில் விற்பனைக்கு வருகிறது, வெளிநாட்டு சந்தைகளில் கிடைப்பது குறித்த எந்த தகவலும் இல்லை.
டூய்ல்-சிம் Huawei P40 Lite E, EMUI 9.1 உடன் Android 9-ல் இயங்குகிறது. இது 6.39 இன்ச் (720 x 1,560) மெலிதான பெசல்களுடன் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனில் ஆக்டா கோர் ஹவாய் கிரின் 810 SoC ஆண்ட்ராய்டு 9-ல் உள்ளது. Huawei P40 Lite E-யில் உள்ள GPU, Mali G51-MP4 ஆகும். இந்த போன் 4ஜிபி என்ற ஒரே ஒரு ரேம் வேரியண்டில் வருகிறது.
கேமராக்களைப் பற்றி பேசுகையில், Huawei P40 Lite E பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முதன்மையானது f/1.8 aperture உடன் 48 மெகாபிக்சல் சென்சார், இரண்டாம் நிலை f/2.4 aperture உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், மூன்றாவது 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார். முன்பக்கத்தில், ஹோல்-பஞ்சில் f/2.0 aperture உடன் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.
Huawei P40 Lite E, 64 ஜிபி-க்கு ஒரே ஒரு ஸ்டோரேஜ் வேரியண்ட் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி (512 ஜிபி வரை) விரிவாக்க முடியும். Huawei P40 Lite E-யின் இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11b/g/n support, Bluetooth v5.0, a 3.5mm headphone jack மற்றும் சார்ஜ் செய்ய Micro-USB port ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போனின் பின்புறத்திலும் கைரேகை ஸ்கேனர் உள்ளது.
பட்ஜெட் போனில் 10W சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. Huawei P40 Lite E 15,9.81x76.13x8.13மிமீ அளவு மற்றும் வெறும் 176 கிராம் எடை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Cat Adventure Game Stray is Reportedly Coming to PS Plus Essential in November