Huawei P40 Lite வெளியானது! 

Huawei P40 Lite, ஹவாய் மொபைல் சர்வீசஸ் (HMS) கோருடன் ஆண்ட்ராய்டு 10-ஐ இயக்குகிறது, அதாவது கூகுள் மொபைல் சேவைகளுக்கு (GMS) அணுகல் இல்லை.

Huawei P40 Lite வெளியானது! 

Huawei P40 Lite, Huawei Nova 6 SE-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தோன்றுகிறது

ஹைலைட்ஸ்
  • Huawei P40 Lite, 48 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது
  • செல்ஃபிகளுக்காக முன்புறத்தில் 24 மெகாபிக்சல் கேமரா உள்ளது
  • இது, 40W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது
விளம்பரம்

மார்ச் 26 அன்று நடைபெறும் ஒரு நிகழ்வில் Huawei P40 சீரிஸ் வெளியிடப்பட உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஸ்பெயினில் Huawei P40 Lite-ஐ அறிமுகப்படுத்தியுள்ளார். இருப்பினும், Huawei P40 Lite என்பது பெயரில் மட்டுமே ஒரு புதிய போன், ஏனெனில் இது வெளிப்படையாக Huawei Nova 6 SE-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும், இது டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. 


Huawei P40 Lite விலை:

Huawei P40 Lite-ன் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டுக்கு EUR 299 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,378) என்று கூறப்படுகிறது, ஆனால் 8 ஜிபி ரேம் பேக்கிங் செய்யும் அதிக சக்திவாய்ந்த மாடலில் எந்த வார்த்தையும் இல்லை. இந்த போன் Midnight Black, Sakura Pink மற்றும் Crush Green கலர் ஆப்ஷன்களில் வருகிறது, இது மார்ச் 2 முதல் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு இருக்கும். இருப்பினும், இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளுக்கு எப்போது இந்த போனை வழங்கும் என்பது எந்த வார்த்தையும் இல்லை.

Huawei P40 Lite விவரக்குறிப்புகள்:

Huawei P40 Lite, டூயல்-சிம் போனாகும், மேலும், EMUI உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இருப்பினும், இந்த மென்பொருள் ஹவாய் மொபைல் சர்வீசஸ் (HMS) மையத்தைச் சுற்றியே கட்டப்பட்டுள்ளது, கூகுள் மொபைல் சர்வீசஸ் (GMS) கோர் அல்ல, அதாவது அத்தியாவசிய கூகுள் சேவைகளான பிளே ஸ்டோர், ஜிமெயில் மற்றும் வரைபடங்கள் போன்றவற்றை அணுக முடியாது. புதிய ஹவாய் போன் 6.4 அங்குல முழு எச்டி + (1080 x 2310 பிக்சல்கள்) டிஸ்பிளேவை மேல்-இடது மூலையில் hole-punch-ல் கொண்டுள்ளது. இது, 8 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டு, ஆக்டா கோர் கிரின் 810 SoC-யால் இயக்கப்படுகிறது.

Huawei P40 Lite, குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அகல-கோண லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. hole-punch-ல் வைக்கப்பட்டுள்ள 24 மெகாபிக்சல் முன் கேமரா மூலம் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளை செய்யலாம்.

போனில் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மேலும் விரிவாக்கம் செய்யலாம். Huawei P40 Lite 3.5 headphone jack-ஐ தக்க வைத்துக் கொண்டுள்ளது மற்றும் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இது 4,200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது, இது 40W சூப்பர்சார்ஜ் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் 4G, Bluetooth, GPS மற்றும் NFC ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் USB Type-C port, சார்ஜ் மற்றும் file transfer-க்கு உள்ளது.

  • KEY SPECS
  • NEWS
Display 6.40-inch
Front Camera 24-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4200mAh
OS Android 10
Resolution 1080x2310 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »