Huawei Nova 13, Nova 13 Pro செல்போன்களோடு சேர்த்து வந்த FreeBuds Pro 4

Huawei Nova 13 சீரியஸ் அக்டோபர் மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. இப்போது உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

Huawei Nova 13, Nova 13 Pro செல்போன்களோடு சேர்த்து வந்த FreeBuds Pro 4

Photo Credit: Huawei

Huawei Nova 13 Pro (படம்) அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

ஹைலைட்ஸ்
  • Huawei Nova 13 செல்போன்கள் Android 14 அடிப்படையிலான HarmonyOS 4.2 மூலம் இ
  • 60 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது
  • 50 மெகாபிக்சல் முதன்மை கேமராக்களைக் கொண்டுள்ளது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Huawei Nova 13 மற்றும் Nova 13 Pro செல்போன்கள் பற்றி தான்.


Huawei Nova 13 சீரியஸ் அக்டோபர் மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. இப்போது உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அவை Huawei Nova 13 மற்றும் Nova 13 Pro ஆகும். இந்த இரண்டு மாடல்களிலும் Kirin 8000 சிப்செட்கள் மற்றும் 100W திறனில் சார்ஜ் செய்யக்கூடிய 5,000mAh பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. Huawei FreeBuds Pro 4 ஆனது நவம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது உலகளாவிய வெளியீட்டு விழாவில் Huawei Mate X6 புக்-ஸ்டைல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியது. அதனுடன் FreeBuds Pro 4 வெளியிடப்பட்டது.


Huawei Nova 13 செல்போன்கள் மற்றும் FreeBuds Pro 4 விலை
Huawei Nova 13 விலை 12GB ரேம் + 256GB மெமரி மாடல் ரூ. 46,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் Nova 13 Pro ஆனது 12GB ரேம் + 512 GB மெமரி மாடல் ரூ. 67,100 என பட்டியலிடப்பட்டுள்ளது. இவை கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.
Huawei FreeBuds Pro 4 இயர்போன்கள் ரூ. 13,400 விலையில் வந்துள்ளது. இது கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த தயாரிப்புகள் தற்போது மெக்சிகோவில் கிடைக்கின்றன. விரைவில் உலகளாவிய சந்தைகளில் விற்பனைக்கு வரும்.

Huawei Nova 13, Nova 13 Pro அம்சங்கள்

Huawei Nova 13 ஆனது 6.7-இன்ச் முழு-HD+ OLED திரையைக் கொண்டுள்ளது, அதே சமயம் Pro மாறுபாடு 6.76-inch OLED குவாட்-வளைந்த திரையை பெறுகிறது. இரண்டும் 120Hz வரை புதுப்பிப்பு வீதத்தை சப்போர்ட் செய்கிறது. Kirin 8000 SoC சிப்செட்டில் இயங்குகின்றன. Android 14-அடிப்படையிலான HarmonyOS 4.2 உடன் வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5,000mAh பேட்டரிகள் இடம்பெறுகிறது. USB Type-C போர்ட் வழியாக 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
இரண்டு செல்போன்களும் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா கொண்டுள்ளது. Huawei Nova 13 உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டரைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ப்ரோ மாடல் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 8 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவைப் பெறுகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இரண்டு மாடல்களும் 60-மெகாபிக்சல் முன்பக்க சென்சார் கேமராவை கொண்டுள்ளன, மேலும் ப்ரோ வேரியண்டில் கூடுதலாக 8 மெகாபிக்சல் 5x ஜூம் லென்ஸ் உள்ளது.

Huawei FreeBuds Pro 4 அம்சங்கள்

Huawei FreeBuds Pro 4 TWS இயர்போன்கள் 11mm மைக்ரோ-பிளாட் ட்வீட்டரைக் கொண்டுள்ளது. ANC மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ அம்சங்களுக்கான சப்போர்ட் வழங்குகின்றன. தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP54 மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. சார்ஜிங் கேஸுடன் சேர்ந்து, ஒருமுறை சார்ஜ் செய்தால் 22 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக் நேரத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ces_story_below_text

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. விவோ ரசிகர்களுக்கு ஒரு ஷாக் அப்டேட்! X300 Ultra-வில் கேமரா பட்டன் கிடையாதா? ஆனா டிஸ்ப்ளே சும்மா தெறிக்குது
  2. சாம்சங்-ல இருந்து ஒரு "கனெக்டிவிட்டி" புரட்சி! டவர் இல்லாத காட்டுல கூட இனி போன் பேசலாம். Galaxy S26-ல் வரப்போகும் அந்த மேஜிக் பீச்சர்
  3. ஜிம்முக்கு போகாமலே ஃபிட் ஆகணுமா? அமேசான்ல ஆஃபர் மழை! ₹45,000 ட்ரெட்மில் வெறும் ₹10,999-க்கு
  4. ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு புதிய கேமரா அரக்கன்! 7000mAh பேட்டரி + ரெண்டு 200MP கேமரான்னு Oppo Find X9s மரண மாஸா வருது
  5. ஜனவரி 6-க்கு ரெடியா இருங்க! 7000mAh பேட்டரி + 200MP கேமரான்னு Realme 16 Pro+ மரண மாஸா வருது
  6. (Update) பட்ஜெட் போன் லிஸ்ட்ல டெக்னோ-வோட அடுத்த ஆட்டம் ஆரம்பம்! ? ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.. Spark Go 3 & Pop 20 பத்தின கசிந்த தகவல்கள்
  7. சாம்சங் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்! S26 சீரிஸ் விலை தாறுமாறா ஏறப்போகுது. என்ன காரணம்? இதோ முழு விவரம்!
  8. உங்க சாம்சங் டேப்லெட்டுக்கு புது பவர் வருது! One UI 8.5 டெஸ்ட் பில்ட்ஸ் லீக் ஆகிடுச்சு! என்னென்ன மாஸ் பீச்சர்ஸ் இருக்கு?
  9. ஸ்பீக்கரா இல்ல ஷோ-பீஸா? வீட்டு டிசைனோட அப்படியே கலந்துடுற மாதிரி சாம்சங் கொண்டு வந்திருக்காங்க ‘Music Studio’ சீரிஸ்
  10. ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு புதிய "பேட்டரி அரக்கன்"! ரியல்மி-ல இருந்து 10,001 mAh பேட்டரியோட ஒரு போன் வருது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »