இந்தியாவில் வெளியாகவுள்ள ஹானர் வியூ 20-யின் விலை என்ன தெரியுமா?

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 2 பிப்ரவரி 2019 13:21 IST
ஹைலைட்ஸ்
  • ஆன்லைன் சேலில் வெளியாகிறது ஹானர் வியூ 20!
  • அமேசான் இந்தியா மற்றும் ஹைய் ஹானர் ஸ்டோர்களில் வெளியீடு!
  • பல தள்ளுபடிகளுடன் போன்கள் விற்பனை!

அமேசான் இந்தியா மற்றும் ஹைய் ஸ்டோரில் ஹானர் வியூ 20 வெளியாகுகிறது.

ஹவாய் நிறுவனத்தின் புதிய வெளியிடான ஹானர் வியூ 20 ரூபாய் 37,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.  அமேசான் இந்தியா மற்றும் ஹைய் ஹானர் ஸ்டோர்களில் விற்பனைக்கு உள்ள இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் தனது மிகப்பெரிய ஹோல் பஞ்ச் செல்ஃபி கேமரா மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அண்ட்ராய்டு ஃபையில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 6.4 இஞ்ச் ஸ்க்ரீன் கொண்டது. 960fps ஸ்லோ மோஷன் எடுக்கும் வசதியும் இதில் அடங்கும். மேலும் 48 மெகா பிக்சல் கேமரா, சோனி நிறுவனத்தின் IMX586 சென்சார், 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு மாடல்களாக இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது.

4,000 mAh பேட்டரி பவருடன் வெளியாகும் இந்த ஹானர் வியூ 20 போன் சீனாவில் கடந்த மாதம் ஹானர் வி20 உடன் வெளியிடப்பட்டது. மேலும் இந்நிறுவனம் ஹானர் பேண்ட் 4 (ரன்னிங்க எடிஷன்) மற்றும் ஹானரின் வாட்ச் மேஜிக் என தனது இரண்டு புதிய தயாரிப்புக்களை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் வியூ 20யின் விலை பட்டியலை பொருத்தவரை 6ஜிபி ரேம்/128 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.45,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் 6ஜிபி ரேம்/256 ஜிபி நினைவகத்தை கொண்ட ஸ்மார்ட்போன் ரூபாய்.45,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பான்டம் புளூ, மிட்நைட் பிளாக் மற்றும் சாப்பையர் புளூ போன்ற நிறங்களில் வெளியாகிறது.
 

ஆனால் தற்போதைய நிலையில் 6ஜிபி ரேம்/128 ஜிபி நினைவகம் கொண்ட மிட்நைட் பிளாக் மற்றும் சாப்பையர் புளூ மாடல்கள் மட்டுமே ஹானர் ஹைய் ஸ்டோரில் வெளியாகியுள்ளது. அறிமுக சேலில் அமேசான் சார்பாக வட்டியில்லா தவணை முறையும் ஜசிஜசிஜ க்ரெடிட் கார்ட் மூலம் வாங்குபவர்களுக்கு  கூடுதலாக 5% தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் ஜியோ ஆஃபர் பொருத்தவரை 2,200 ரூபாய் கேஷ்பேக்கும் 2.2 டிபி டேட்டாவும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுபோல் பேடிஎம் கேஷ்பேக் ஆஃபராக ரூ.1,400 வரை பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. அதுபோல மேபிகிவிக் நிறுவனம் சார்பாக ரூ. 15,000 கேஷ்பேக் கிடைக்க வாய்ப்புள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Modern design
  • Good battery life
  • Bundled supercharger
  • Bad
  • Inconsistent face recognition
  • Hole-punch design might not appeal to everyone
 
KEY SPECS
Display 6.40-inch
Processor HiSilicon Kirin 980
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2310 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.