ஹானர் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஹானர் பிளே, ஹானர் 8சி மற்றும் ஹானர் 7சி ஆகிய போன்களுக்கு தள்ளுபடி!
ஹானர் பிளே போன் இந்த சேலில் ரூபாய் 16,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
‘ஹானர் டே சேல்' அமேசான் வலைதளத்தில் தொடங்கியுள்ள நிலையில் ஹானர் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஹானர் பிளே, ஹானர் 8சி மற்றும் ஹானர் 7சி ஆகிய போன்களுக்கு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் சப்-பிராண்டு ஆன ஹானர் தனது தயாரிப்பான ஹானர் 8X ஸ்மார்ட்போனுக்கு இந்த சேலின் மூலம் எஃஸ்சேஞ்சு ஆஃபர் வழங்கியுள்ளது. மேலும் ஹனார், வியூ 20 வாடிக்கையாளர்களுக்கு வி.ஐ.பி வாடிக்கையார் சேவை மற்றும் இதர சேவைகளும் வழங்குகிறது.
அமேசானில் நேற்று துவங்கப்பட்ட இந்த சேல் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை தொடரும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் மற்ற மாடல்களான ஹானர் பிளே (4 ஜிபி ரேம்/ 64ஜிபி சேமிப்பு வசதி) தனது அறிமுக விலையான ரூபாய் 19,999 யிலுருந்து 3000 ரூபாய் குறைத்து,16,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ஹானர் 8சி (4ஜிபி ரேம்/ 32ஜிபி சேமிப்பு வசதி ) மாடல் 10,999 ரூபாய்க்கு இந்த சேலில் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ஹானர் 7சி (3ஜிபி ரேம்/ 32ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ‘ஹானர் டே சேல்' போன் வாங்குபவர்களுக்கு வட்டியில்லா கடன் உதவி மற்றும் தள்ளுபடி/ கேஷ்பேக் அஃபர்கள் என இந்த அமேசான் சேல் களைகட்டுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters