சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இன்று வெளியாகவுள்ளது. பாரிஸ் நகரில் மாலை 5 மணி (இந்தயாவில் இரவு 9.30 மணி) அளவில், ஹானரின் இந்த புதிய படைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த ஹானர் 20 வியூ ஸ்மார்போனில், வழக்கமாக வெளியாகும் சீரான நாட்ச் (notch) டிஸ்பிளேவுக்கு பதிலாக குழியான டிசையின் டிஸ்பிளேவை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளதால் மக்கள் மத்தியில் இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு ஏற்கனவே கிடைத்துள்ளது.
சீனாவில் இந்த ஸ்மாரட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் இந்திய விலை 6 ஜிபி ரேம் 128 ஜிபி நினைவகத்திற்கு சுமார் 30,400.ரூ விற்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் 8 ஜிபி ரேமும் 128 ஜிபி நினைவகத்தை கொண்ட இந்த ஸ்மார்போன் 35,000 ரூ க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது. இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் 29 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகும் இந்த ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தளத்தை உருவாக்கி தயார் நிலையில் அமேசான் மற்றும் ஹைய் ஹானர் இணையதளங்கள் உள்ளனர்.
மேலும் ஹானர் வியூ 20 வகை ஸ்மார்ட்போனின் இடது புறத்தில் கேமரா அமைந்திருப்பது இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு புதிய லுக்கை தருகிறது. 48 மெகா பிக்சல் கேமரா மற்றும் சோனி IM586 சென்சாருடன் இயங்கு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அண்டிராய்டு 9.0 பையில் இயங்குகிறது.
இரண்டு சிம்கார்டுகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.4 இஞ்ச் பூல் ஹெ.டி ஸ்கீரிண், கேமரா டெப்த் வசதிகொண்ட தொழிநுட்பம் மற்றும் 4000 mAh பேட்டரி பவருடன் வெளியாகி அசத்தவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்