48 மெகா பிக்சல் கேமரா, சோனி நிறுவனத்தின் IMX586 சென்சார், 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு மாடலாக ஹானர் வியூ20 வெளியாகியுள்ளது.
அமேசான் இந்தியா மற்றும் ஹைய் ஸ்டோரில் ஹானர் வியூ 20 வெளியாகுகிறது.
ஹவாய் நிறுவனத்தின் புதிய வெளியிடான ஹானர் வியூ 20 ரூபாய் 37,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. அமேசான் இந்தியா மற்றும் ஹைய் ஹானர் ஸ்டோர்களில் விற்பனைக்கு உள்ள இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் தனது மிகப்பெரிய ஹோல் பஞ்ச் செல்ஃபி கேமரா மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அண்ட்ராய்டு ஃபையில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 6.4 இஞ்ச் ஸ்க்ரீன் கொண்டது. 960fps ஸ்லோ மோஷன் எடுக்கும் வசதியும் இதில் அடங்கும். மேலும் 48 மெகா பிக்சல் கேமரா, சோனி நிறுவனத்தின் IMX586 சென்சார், 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு மாடல்களாக இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது.
4,000 mAh பேட்டரி பவருடன் வெளியாகும் இந்த ஹானர் வியூ 20 போன் சீனாவில் கடந்த மாதம் ஹானர் வி20 உடன் வெளியிடப்பட்டது. மேலும் இந்நிறுவனம் ஹானர் பேண்ட் 4 (ரன்னிங்க எடிஷன்) மற்றும் ஹானரின் வாட்ச் மேஜிக் என தனது இரண்டு புதிய தயாரிப்புக்களை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹானர் வியூ 20யின் விலை பட்டியலை பொருத்தவரை 6ஜிபி ரேம்/128 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.45,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் 6ஜிபி ரேம்/256 ஜிபி நினைவகத்தை கொண்ட ஸ்மார்ட்போன் ரூபாய்.45,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பான்டம் புளூ, மிட்நைட் பிளாக் மற்றும் சாப்பையர் புளூ போன்ற நிறங்களில் வெளியாகிறது.
ஆனால் தற்போதைய நிலையில் 6ஜிபி ரேம்/128 ஜிபி நினைவகம் கொண்ட மிட்நைட் பிளாக் மற்றும் சாப்பையர் புளூ மாடல்கள் மட்டுமே ஹானர் ஹைய் ஸ்டோரில் வெளியாகியுள்ளது. அறிமுக சேலில் அமேசான் சார்பாக வட்டியில்லா தவணை முறையும் ஜசிஜசிஜ க்ரெடிட் கார்ட் மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி கிடைக்கும்.
மேலும் ஜியோ ஆஃபர் பொருத்தவரை 2,200 ரூபாய் கேஷ்பேக்கும் 2.2 டிபி டேட்டாவும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுபோல் பேடிஎம் கேஷ்பேக் ஆஃபராக ரூ.1,400 வரை பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. அதுபோல மேபிகிவிக் நிறுவனம் சார்பாக ரூ. 15,000 கேஷ்பேக் கிடைக்க வாய்ப்புள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple's Upgraded AirTag to Offer Improved Tracking Features; HomePod Mini to Feature New Chip: Report