சர்வதேச சந்தையில் இந்த போன் வரும் ஜன.22ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது
ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனானது சீனாவில் கடந்த டிசம்பரில் ஹானர் வி20 என்ற பெயரில் அறிமுகமானது.
ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனானது இந்திய சந்தை வெளியிட்டுக்கு தயாராகி வருகிறது. இதன் வெளியிடானது இந்தியாவில் வரும் ஜன.29ஆம் தேதி இருக்கும் என தெரிகிறது. அமேசான் வலைதளமானது ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனை பிரத்தியோகமாக விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் இதன் விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தற்போது 10க்கும் மேற்பட்ட மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனானது சீனாவில் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது சர்வதேச சந்தையில் இந்த போன் வரும் ஜன.22ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை, எனினும் சீன சந்தை விலையை வைத்து இந்தியாவில் எதிர்ப்பார்க்கும் விலை விவரங்கள், ஹானர் v20 6ஜிபி ரேம் + 128ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலையானது CNY 2,999 (தோராயமாக ரூ.30,400) ஆகும். 8ஜிபி ரேம் + 128ஜிபி கொண்ட போனின் விலையானது CNY 3,499 (தோராயமாக ரூ.35,500) ஆகும்.
இந்த போன் ப்ளூ, ரெட், மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதில் 8ஜிபி ரேம் + 256ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலையானது CNY 3,999 (தோராயமாக ரூ.40,600) ஆகும். இந்த போன் ஏற்கனவே சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் ஜன.29முதல் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோல் பன்ச் செல்பி கேமரா சென்சார் போனின் இடதுபுறம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்பானது கிளாஸி கிரேடியண்ட் பினிஷிங் கொண்டுள்ளது. இதனுடன் டூயல் கேமரா செட்டப், கைரேகை சென்சாரும் உள்ளது.
டூயல் சிம் கொண்ட ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனானது, ஆண்ட்ராய்டு 9.0 பை கொண்டு இயங்குகிறது. 6.4-இன்ச் புல் எச்டி + (1080x2310 பிக்செல்ஸ்) டிஎப்டி டிஸ்பிளே 19.5:9 அக்செப்ட் ரேசியோ, 16.7 மில்லியன் கலர்கள் கொண்டுள்ளது.
இதில் ஆக்டோ கோர் ஹைசிலிகான் கிரின் 980 பிராசஸருடன் 8ஜிபி மற்றும் 6ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் நினைவகம் 128ஜிபி மற்றும் 256ஜிபி வகைகளில் கிடைக்கிறது. இதில் மைக்ரோ Sd கார்டு சப்போர்ட் கிடையாது.
ஹானர் வியூ 20 கேமராவை பொருத்தவரையில், 48 மெகா பிக்ஸெல்ஸ் சோனி IMX586 சென்சாருடன் f/1.8 அப்பர்ச்சர், 960fps ஸ்லோ மோஷன் வீடியோ ரெகார்டிங் சப்போர்ட், எச்டிஆர், எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது. முன்பக்கம் 25 மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Lenovo ThinkBook 14x Launched in India With Intel Core Ultra Series 2 Processors: Price, Specifications