Magic UI 3.0 அப்டேட் Morandi வண்ணத் திட்டத்துடன் புதிய Magazine வடிவமைப்பைக் கொண்டுவருகிறது.
பயனர் அறிக்கையின்படி, Magic UI 3.0-யின் அளவு 4.6GB எடையைக் கொண்டதாகும்
Honor 20, Honor 20 Pro மற்றும் Honor View 20 ஆகியவை ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட Magic UI 3.0 அப்டேட்டைப் பெறத் தொடங்கியுள்ளன. ஆன்லைனில் பல பயனர்கள் அறிவித்தபடி அப்டேட் உலகளவில் வெளிவருகிறது. கூடுதலாக, உருவாக்க எண்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுவதால் அவை குறித்து எந்த அறிப்பும் இல்லை. புதிய அப்டேட் magazine-style layout, dark mode, Morandi colour scheme, புதிய animations மற்றும் பலவற்றைக் கொண்டுவருகிறது. மறுபரிசீலனை செய்ய, கடந்த வாரம் Huawei P30 சீரிஸ் மற்றும் Mate 20 சீரிஸ் EMUI பதிப்பு 10.0.0.168 உடன் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறத் தொடங்கியது. Honor 20, Honor 20 Pro மற்றும் Honor View 20 ஆகிய மூன்று கைபேசிகளுக்கான வெளியீட்டை ஹவாய் நிறுவனத்திற்கு சொந்தமான பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது.
சச்சின் கே.வி (sachin kv) எழுதிய ட்விட்டர் பதிவின் படி, அவர் தனது Honor 20 ஸ்மார்ட்போனுக்கான Magic UI 3.0 அப்டேட்டைப் பெற்றார். உருவாக்க எண் 10.0.0.168 (C431E9R3P7) மற்றும் இதன் எடை 4.63GB ஆகும். மொராண்டி வண்ணத் திட்டத்துடன் புதிய Magazine design UI-ஐக் சேஞ்ச்லாக் கொண்டுள்ளது. GPU Turbo மற்றும் Phone Clone-க்கான மேம்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன், புதிய அப்டேட்டில் பல பாதுகாப்பு மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
![]()
Photo Credit: Twitter/ sachin kv
இப்போது, XDA forums-ஐச் சேர்ந்த ஒரு பயனர் தனது Honor View20 ஸ்மார்ட்போனுக்காக Magic UI 3.0.0 அப்டேடைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் ஒருபோதும் பீட்டாவிற்கு பதிவு செய்யவில்லை என்பதால், இந்த அப்டேட் உண்மையில் ஒரு நிலையான பொது வெளியீடு என்று அவர் நம்புகிறார். பயனரால் அறிவிக்கப்பட்ட புதிய அப்டேட்டின் உருவாக்க எண் 10.0.0.171 (C432E10R2P5) ஆகும்.
மற்றொரு பயனர் Magic UI 3.0 அப்டேட்டைப் பெற்றதாக Honor India forums-ல் தெரிவித்துள்ளார். புதிய அப்டேட் எந்த சாதனத்தில் பெறப்பட்டது என்பதை இப்போது பயனர் குறிப்பிடவில்லை. ஆனால், சேஞ்ச்லாக் பகிரப்பட்டது. மேலும், உருவாக்க எண் 10.0.0.161 (C675E9R1P2log) ஆகும்.![]()
Photo Credit: club.hihonor.com
இந்த அறிக்கைகள் உறுதிப்படுத்த, கேஜெட்ஸ் 360 ஹானர் இந்தியாவை அணுகியது. மேலும் இந்த வெளியீடு குறித்த செய்திக்குறிப்பு வழங்கப்பட்டது. "புதிய அப்டேட்டின் பீட்டா பதிப்பு ஒரு மென்பொருள் மேம்படுத்தல் மூலம் இந்தியா உட்பட உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. புதிய Magic UI 3.0 அற்புதமான அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. இது, அனுபவத்தை தடையற்ற, ஒருங்கிணைந்த மற்றும் பயனர் நட்பாக மாற்றுகிறது. சமீபத்திய Magic UI 3.0 பதிப்பு Honor 20 PRO மற்றும் Honor View 20 ஸ்மார்ட்போன்களுக்கும் கிடைக்கும் "என்று அறிக்கை கூறுகிறது.
Magic UI 3.0 கொண்டுவரும் விரிவான மாற்றங்களை ஹானர் தனது அறிக்கையில் கொண்டுள்ளது, இதில் Magazine layout, new drop-down menu design, large fonts, dark mode, sense-activated animation effects, video shooting horizontal level மற்றும் deterministic latency engine ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy S27 Ultra Could Get New Image Processing for More Natural Photos: Leak