ஹானர் 9 எக்ஸ் லைட் மற்றும் ஹொனர் 20 இ ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ஹானர் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹானர் 9 எக்ஸ் லைட் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஹானர் 20 இ டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன்களின் விலை, விவரங்கள் பின்வருமாறு:
Honor 9X Lite-ன் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை யூரோ 199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,400) ஆகும்.
இந்த போன், கருப்பு மற்றும் பச்சை கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
ஹானர் 9 எக்ஸ் லைட் மே 14-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
Honor 20E-ன் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை யூரோ 180 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,800) ஆகும்.
இந்த போன், மிட்நைட் பிளாக் மற்றும் பாண்டம் ப்ளூ கலர் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது.
ஹானர் 20 இ வரும் வாரங்களில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வரக்கூடும்.
இந்த போன், EMUI 9 உடன் ஆண்ட்ராய்டு 9-ல் இயக்குகிறது. இது 6.5 இன்ச் (1,080x2,340 பிக்சல்கள்) முழு எச்டி + டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4 ஜிபி ரேம் கொண்ட ஆக்டா கோர் கிரின் 710 SoC-யால் இயக்கப்படுகிறது.
போனின் டூயல் ரியர் கேமராவில், 48 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
ஹானர் 9 எக்ஸ் லைட், 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வருகிறது. இந்த போன் 3,750 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 160.4x76.6x7.8 மிமீ அளவு மற்றும் 175 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
இந்த போன், EMUI 9.1 உடன் ஆண்ட்ராய்டு 9-ல் இயங்குகிறது. இது 6.21 இன்ச் (1,080x2,340 பிக்சல்கள்) முழு எச்டி + ஐபிஎஸ் பேனலைக் கொண்டுள்ளது. இந்த போன், 4 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் கிரின் 710 எஃப் SoC-யால் இயக்கப்படுகிறது.
போனின் டிரிபிள் ரியர் கேமராவில், 24 மெகாபிக்சல் பிரதான ஷூட்டர், 8 மெகாபிக்சல் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
ஹானர் 20 இ, 64 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் 10W சார்ஜிங் ஆதரவுடன் 3,400 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 154.8x73.64x7.95 மிமீ அளவுடன் வருகிறது. ஆனால், போனின் எடையை குறிப்பிடவில்லை. இந்த போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்