ஹானர் 9X மற்றும் ஹானர் 9X ப்ரோ ஸ்மார்ட் போன்கள் சீனாவில் செவ்வாய் கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஹைசிலிகான் கிரின் 810 எஸ் ஓ சி, ஜிபியூ டர்போ 3.0, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட அட்டகாச வசதிகளை இந்த போன்கள் பெற்றுள்ளன. இரண்டு போன்களிலும் 16 மெகா பிக்சல் பாப் அப் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. 9X ப்ரோவில் 3 பின்புற கேமரா இருக்கும். 9X-ல் இரண்டு பின்புற கேமரா மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
ஹானர் 9X மற்றும் ஹானர் 9X ப்ரோ விலை:
ஹானர் 9X-ன் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, 14,000 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த போனின் 6ஜிபி + 64ஜிபி வகை போன் 16,000 ரூபாய்க்கு விற்கப்படும். அதே நேரத்தில் 6ஜிபி + 124ஜிபி வகை போன் 19,000 ரூபாய்க்கு மார்க்கெட்டில் கிடைக்கும். மிட்நைட் கருப்பு, மிட்நைட் ப்ளூ, சிவப்பு நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும்.
ஹானர் 9X ப்ரோ போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, 22,000 ரூபாய்க்கு விற்கப்படும். அதே நேரத்தில் அந்த போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன், 24,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இந்த போன், மிட்நைட் கருப்பு, ஃபேன்டம் ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும்.
ஹானர் 9X சிறப்பம்சங்கள்:
இந்த போன் ஆண்ட்ராய்டு பை மென்பொருள் கொண்டு இயங்குகிறது. 6.59 இன்ச் முழு எச்.டி+ திரையுடன், 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வசதியை 9X பெற்றுள்ளது. ஹைசிலிகான் கிரின் 810 ஆக்டா கோர் ப்ராசஸரால் பவரூப்பட்டுள்ளது 9X.
ஹானர் 9X-ன் பின்புறத்தில் 48 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட இரண்டாம் நிலை கேமரா இருக்கிறது. 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவையும் இந்த போன் பெற்றுள்ளது.
கூடுதலாக 4,000 எம்.ஏ.எச் பேட்டரி, வை-ஃபை 802.11ac, ப்ளூடூத் v5, 3.5 எம் எம் ஆடியோ ஜாக், USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட வசதிகளையும் பெற்றுள்ளது இந்த போன்.
ஹானர் 9X ப்ரோ சிறப்பம்சங்கள்:
ஹானர் 9X-ல் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றனவோ, அதையேதான் 9X ப்ரோ போனும் கொண்டுள்ளது. ஆனால், 9X ப்ரோவில் 3 பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 48, 2 மெகா பிக்சல் கொண்ட சென்சார்களைத் தவிர்த்து 8 மெகா பிக்சல் கொண்ட வைடு-ஆங்கில் லென்ஸும் 9X ப்ரோவில் இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்